புலிகள் ரேடியோவின் ஒலிபரப்பு விரிவாகிறது
கொழும்பு:
விடுதலைப் புலிகள் தங்களது வாய்ஸ் ஆப் டைகர்ஸ் ரேடியோ ஒலிபரப்பு திறனை அதிகரிக்க நார்வே மூலமாக நவீன கருவிகளைவாங்கியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் புலிகளின் ரேடியோ அலைவரிசையை தென் இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் கேட்க இயலும்.
இலங்கேயின் சண்டே டைம்ஸ் நாளிதழ் இதனைத் தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள நார்வே தூதரகம் மூலம் இந்த ஒலிபரப்புசாதனங்கள் வாங்கப்பட்டள்ளன. அந்த கருவிகளுக்கு இலங்கை அரசு வரி விலக்கும் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் 26ம் தேதி கொழும்பு துறைமுகத்தில் நார்வே தூதரகத்தின் பெயரில் 6 டன் எடையுள்ள கன்டெய்னர் வந்திறங்கியது. அதில்எப்.எம். டிரான்ஸ்மிட்டர்கள், பேக்-அப் டிரான்ஸ்மிட்டர்கள், ஜெனரேட்டர், ஆண்டெனா, ஹெட்போன்கள், பேனல் போர்டுகள்,ஸ்பீக்கர்கள், மைக்ரோபோன்கள், ரெக்கார்டர்கள், சி.டி, பிளேயர்கள், கேபிள்கள் என ரேடியோ நிலையம் அமைக்கத் தேவையானஅனைத்து நவீன கருவிகளும் இருந்தன.
கன்டெய்னரை துறைமுகத்தில் பெற்றுக் கொண்ட நார்வே அதிகாரிகள் அதை புலிகள் வசம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.இதையடுத்து இலங்கை தொலைத் தொடர்பு நிபுணர்கள் அந்தக் கருவிகளை சோதனையிட்டு ஓ.கே. செய்தனர்.
இதையடுத்து அந்த கன்டெய்னர் போலீசாரால் தரை வழியாக வவுனியாவின் வடக்கே ஓமந்தையில் உள்ள கடைசி ராணுவ சோதனைச்சாவடிக்குக் கொண்டு செல்லப்பட்டது. அந்த கன்டெய்னரை திறக்கவோ சோதனையிடவோ கூடாது என இலங்கை பாதுகாப்புச் செயலாளர்ஆஸ்டின் பெர்னாண்டோ உத்தரவிட்டிருந்தார்.
இது தொடர்பான அவரது கடிதமும் அந்த கன்டெய்னருடன் சென்றது. இதனால் அதை யாரும் சோதனையிடவில்லை.
இதன் பின்னர் அந்த கன்டெய்னர் புலிகள் வசம் ராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வாய்ஸ் ஆப் டைகர் ஒலிபரப்பை நவீனப்படுத்தவும் பூஸ்டர்களைப் பயன்படுத்தி அதன் ஒலிபரப்பு தளத்தை அதிகரிக்கவும் புலிகள்திட்டமிட்டுள்ளனர். இதுவரை வன்னி பகுதியில் மட்டுமே கேட்ட இந்த ரேடியோ அலைவரிசையை தென் இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும்அகலப்படுத்த புலிகள் முடிவு செய்துள்ளனர்.
கடந்த வாரம் இந்தியா வந்த அதிபர் சந்திரிகாவின் தம்பியும் எம்.பியுமான அனுரா பண்டாரநாயகா, இது தொடர்பாக பிரதமர்வாஜ்பாயிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த ரேடியோ ஒலிபரப்பால் தமிழகத்திலும் இந்தியாவிலும் புலிகள் ஆதரவு பிரச்சாரம்நடத்தப்படும் என்று அவர் எச்சரித்ததாகத் தெரிகிது.
கொழும்பில் இந்திய உயர் அதிகாரி:
இதற்கிடையே இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதி உடன்பாடு ஏற்பட்டு வருவதுகுறித்து விவாதிக்க இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் கன்வல் சிபல் கொழும்பு சென்றுள்ளார்.
இலங்கை செல்லும் வழியில் சென்னை வந்த அவர் செய்தியாளர்கள் பேசுகையில்,
தனி நாடு கோரிக்கையை கைவிடுவதாக புலிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து சந்தோஷப்பட வேண்டியதும்,அல்லது அதை நம்பாமல் விடுவதும் இலங்கை அரசின் கவலை.
தனி நாடு கோரிக்கையை புலிகள் கைவிட்டு விட்டாலும் கூட அவர்கள் குறித்து எநத்விதமான போக்கை இந்தியாகடைபிடிக்கும் என்பதை இப்போதே சொல்ல முடியாது என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications