நெய்வேலியில் புதிய மின் நிலையம்: கூடுதலாக 420 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பு

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

நெய்வேலியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 420 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையத்தை வரும் 18ம் தேதி முதல் இயங்க உள்ளன.

ரூ. 1,500 கோடி செலவில் தலா 210 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட இரு அனல் மின் உலைகள் கட்டப்பட்டுள்ன.

இதனை வரும் 18ம் தேதி மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் உமா பாரதி நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

இத்தாலியைச் சேர்ந்த அன்சோல்டா எனர்ஜியா என்ற நிறுவனம் இந்த மின் உலைகளை (யூனிட்) கட்டியுள்ளது. இதில் உற்பத்திசெய்யப்படும் 420 மெகாவாட் மின்சாரத்தை தமிழகம், கேரளம், பாண்டிச்சேரி, கர்நாடகம் மாநிலங்கள் பகிர்ந்து கொள்ளும் எனநெய்வேலி மின் நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் துணைத் தலைமைப் பொறியாளர் ராஜன் கூறினார்.

18ம் தேதி முதல் இந்த புதிய மின் நிலையத்தின் முதல் யூனிட் செயல்பட ஆரம்பிக்கும். இரண்டாவசு யூனிட் விரைவில் செயல்படத்தொடங்கும்.

இந்த மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 59 மெகாவாட்டை கேரள மின்வாரியம் வாங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில்நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனமும் கேரள அரசும் கையெழுத்திட்டிள்ளன. மீதம் உள்ள மின்சாரத்தை ஆந்திரம் தவிர்த்த பிறமாநிலங்கள் பகிர்ந்து கொள்ளும்.

இப்போது நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் உள்ள இரு அனல் மின் நிலையங்களும் 2,070 மொகவாட் மின்சாரத்தைத் தயாரித்துவருகின்றன. இப்போது புதிய அனல் மின் நிலையத்தால் மேலும் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாக உள்ளது.

இதுவரை ஆண்டுதோறும் நெய்வேலியில் 18 மில்லியன் டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு 2,070 மெகாவாட் மின்சாரம்தயாரிக்கப்பட்டு வந்தது. இப்போது வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியின் அளவு 24 மில்லியனாக அதிகரித்துள்ளது. இந்த கூடுதல்நிலக்கரியைக் கொண்டு புதிய மின் நிலையத்தில் கூடுதலாக 420 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+