தேவாரம்- சீனிவாசுலு இரண்டாவது நாளாக தொடர்ந்து ஆலோசனை
சத்தியமங்கலம்:
வீரப்பனைப் பிடிக்க மத்திய அரசிடம் நவீன கருவிகளை தமிழக அதிரடிப்படை கோரியுள்ளது.
நைட் விஷன் பைனாகுலர்கள், அதி நவீன துப்பாக்கிகள் உள்ளிட்ட கருவிகள் கோரப்பட்டுள்ளதாக தமிழக அதிரடிப் படைத் தலைவர்வால்டர் தேவாரம் கூறினார். இதே போன்ற கோரிக்கையை கர்நாடக அதிரடிப்படையும் மத்திய அரசிடம் வைத்துள்ளது.
நேற்று இரவு கர்நாடக அரசின் பாதுகாப்பு ஆலோசகர் சீனிவாசுலு தலைமையிலான குழுவினர் சத்தியமங்கலம் அதிரடிப் படை முகாமுக்குவந்தனர். கூட்டு அதிரடிப் படையின் தலைவர் டி.ஜி.பி. தேவாரம், தமிழக அதிரடிப் படையின் தலைவர் ஏ.டி.ஜி.பி. நடராஜன்ஆகியோருடன் விவாதித்தனர். இந்த ஆலோசனைகள் இன்றும் தொடர்ந்தன.
தேடுதல் வேட்டையில் ஈடுபட மத்திய ரிசர்வ் போலீசாரின் உதவியைக் கோரவில்லை என தேவாரம் நிருபர்களிடம் தெரிவித்தார். இந்தக்காட்டுப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட வேண்டுமானால் தமிழ் அல்லது கன்னடம் தெரிந்தவர்கள் இருப்பது தான் நல்லதுஎன்றார்.
வீரப்பனுக்கு உளவு சொல்பவர்கள் மீது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஏ.டி.ஜி.பி. நடராஜன் கூறுகையில், இரு மாநில அதிரடிப் படையினரையும் பல குழுவாக பிரித்து காட்டில் பல்வேறு பகுதிகளில்நிறுத்தியுள்ளோம். அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை வைத்து தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக, தமிழக அதிரடிப்படைகள் இடையே கடந்த ஒரு மாதமாக செய்திப் பரிமாற்றத்தில் பிரச்சனை இருந்தது. அது இப்போதுதீர்க்கப்பட்டுவிட்டது. மேலும் ஆதிவாசிகளின் கிராமங்களில் இருந்து தான் எங்களுக்கு பெரும்பான்மையான தகவல் கிடைக்கிறது.
எனவே, அந்த கிராமங்களில் இரு மாநில படையினரும் முகாமிட்டு இருக்கப் போகிறோம் என்றார்.
இதற்கிடையே தமிழக அதிரடிப் படையினர் பண்ணார், தாளவாடி, மாதேஸ்வரன் மலை ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் தேடுதல்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே கர்நாடக, தமிழக அதிரடிப்படையினரின் வேட்டையால் வீரப்பன் கேரள காட்டுப் பகுதிக்குள் நுழையலாம் என்பதால்அதைத் தடுக்க கேரள போலீசாரும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இப்போது சுமார் 2,000 அதிரடிப் படையினர் கர்நாடக-தமிழக காட்டுப்பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
காட்டுக்குள் மற்றொரு உடல்?
இந்நிலையில் நாகப்பா உடல் கண்டெடுக்கப்பட்ட செங்கடி காட்டுக்குள் மற்றொரு உடலும் கிடப்பதாக கர்நாடகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து கர்நாடக அதிரடிப்படையினர் அந்தப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications