பிப்ரவரியில் சென்னை மாநகர மேயர் தேர்தல்
சென்னை:
சென்னை மேயர் பதவிக்கான தேர்தலை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக சென்னைஉயர் நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் கமிஷன் மனு தாக்கல் செய்துள்ளது.
மேயர் பதவியிலிருந்து மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்யப்பட்டு விட்டதால், தேர்தலில் இரண்டாவது இடத்தைப்பெற்ற அதிமுக வேட்பாளர் பாலகங்காவை மேயராக அறிவிக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி. மைத்ரேயன்சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மற்றொரு மனுவில், மாநில அரசின் நிதி நெருக்கடியில், இப்போது மீண்டும் மேயர் தேர்தலை நடத்தினால்செலவீனம் ஏற்படும். எனவே மேயர் தேர்தல் நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி நாகப்பன்ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மேயர் தேர்தலுக்குத் தடையெல்லாம் விதிக்க முடியாது என்று கூறியது.
மேலும் மேயர் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற தேதியை மாநில தேர்தல் ஆணையம் இன்றைக்குள்கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.
அதன்படி தமிழக தேர்தல் ஆணையம் இன்று உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.
வரும் பிப்ரவரி மாதம் சென்னை மாநகர மேயர் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அம்மனுவில் தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது.
அப்போது குறுக்கிட்ட மைத்ரேயனின் வழக்கறிஞர் ஜோதி, இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தேர்தலை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்றார்.
ஆனால் நீதிபதிகளோ, தேர்தலுக்குத் தடை விதிக்கும் எண்ணம் கோர்ட்டுக்கு இல்லை. இந்த வழக்கின் அடுத்த கட்டவிசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
-->
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications