தமிழகத்தில் விரைவில் பெண் போலீஸ் பட்டாலியன்!
சென்னை:
தமிழகத்தில் முழுக்க முழுக்க பெண் காவலர்களை மட்டுமே கொண்ட சிறப்புப் போலீஸ் படைப் பிரிவு விரைவில்துவக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சென்னையில் நடைபெற்ற காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார்.மாநாட்டில் அவர் பேசுகையில்,
அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் இன்று வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. அதேபோல மகளிர்நீதிமன்றங்களும் சிறப்பாக செயலாற்றி வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவிலேயே முதல் முறையாக மகளிர்போலீஸ் பட்டாலியன் அதாவது சிறப்புப் பிரிவு அமைக்கப்படவுள்ளது.
இந்த போலீஸ் படைப் பிரிவில் 1,100 பெண் போலீஸார் இருப்பார்கள். முழுக்க முழுக்க பெண் காவலர்களே இதில்இடம் பெறுவார்கள்.
தர்மபுரியில் நக்சலைட்டுகள் அட்டகாசத்தை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் தர்மபுரி மாவட்டம்போச்சம்பள்ளி என்ற இடத்தில் தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் பிரிவு அமைக்கப்படும். இந்த மாவட்டத்தில் சிறிதுகாலம் பணியாற்ற வேண்டும் என்பது காவலர்களுக்கு கட்டாயமாக்கப்படும்.
கந்து வட்டிக் கொடுமைக்கு முடிவு கட்ட தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற செயல்களை போலீஸார்இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். கந்து வட்டியை கடுமையான குற்றமாக அறிவிக்கப்படும்.
அனைத்து காவல் நிலையங்களிலும் வீடியோ கேமராக்கள் நிறுவப்படும். இதற்காக ரூ.6.40 கோடி நிதிஒதுக்கப்படும். 1,250 காவல் நிலையங்களில் கம்ப்யூட்டர்கள் வாங்க ரூ.7.50 கோடி, காவலர்களுக்கு கையில்வைத்துக் கொள்ளும் வகையிலான வயர்லஸ் வாங்க ரூ.90 லட்சம், சென்னை நகர போலீஸாருக்குவெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் நவீன கருவி பொருத்தப்பட்ட இரண்டு வேன்கள் வாங்க ரூ.51.61 லட்சம்ஒதுக்கப்படும் என்றார் முதல்வர்.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications