காட்டு பகுதிகளுக்கு செல்ல வி.ஐ.பிக்களுக்கு தடை

Subscribe to Oneindia Tamil

சத்தியமங்கலம்:

முக்கியப் பிரமுகர்கள் யாரும் காட்டுப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என தமிழக போலீசார் எச்சரித்துள்ளனர்.

தமிழகம் மற்றும் கர்நாடகத்தின் பல அரசியல்வாதிகள், கிரானைட் தொழிலதிபர்கள், நடிகர்களுக்கு வீரப்பன் நடமாடி வரும் காட்டுப் பகுதிகளை ஒட்டிபண்ணை வீடுகள் உள்ளன. அவர்கள் அங்கே சென்று ஓய்வெடுப்பது வழக்கம்.

கடந்த 2000ல் கன்னட நடிகர் ராஜ்குமாரும் இதே போன்ற ஒரு பண்ணை வீட்டில் தங்கியிருந்த போது தான் வீரப்பனால் கடத்தப்பட்டார்.

தற்போது அவனால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காட்டுப் பகுதிக்குள் முக்கியப்பிரமுகர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

தற்போதுள்ள சூழ்நிலையில் வீரப்பன் மேலும் ஏதாவது ஒரு முக்கியப் பிரமுகரைக் கடத்தி விடலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

எனவே முக்கியப் பிரமுகர்களுக்குச் சொந்தமான பண்ணை வீடுகள் காட்டுப் பகுதிக்குள் இருந்தாலும் போலீசாரின் அனுமதி பெற்று பாதுகாப்புடன் தான்செல்ல வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+