"வீரப்பனை பிடிக்க ராணுவம் தேவையில்லை": தமிழக அதிரடிப்படை
ஈரோடு:
வீரப்பனைப் பிடிக்க தமிழக அதிரடிப்படை வீரர்களே போதும் என்றும் ராணுவம் தேவையில்லை என்றும் தமிழகஅதிரடிப்படைத் தலைவரான கூடுதல் டி.ஜி.பி. நடராஜ் கூறினார்.
சத்தியமங்கலத்தில் உள்ள அதிரடிப்படை முகாமில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
முன்னாள் கர்நாடக அமைச்சர் நாகப்பாவை சுட்டுக் கொன்றது வீரப்பன்தான். ஆனால் கர்நாடக மக்களிடம் தனக்குகெட்ட பெயர் ஏற்பட்டு விடும் என்பதால், தமிழக அதிரடிப்படை மீது பழி சுமத்துகிறான்.
கர்நாடக அரசு கேட்டுக் கொண்டதால், கர்நாடக காட்டு எல்லைக்குள் நுழையாமல் தமிழக எல்லையில் மட்டுமேநடமாடிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் எப்படி நாங்கள் கர்நாடக காட்டுக்குள் புகுந்திருக்க முடியும்? நமதுவீரர்கள் 2 பேர் இறந்திருந்தாலும் கூட அதை மறைக்க முடியுமா?
தமிழக காட்டுப் பகுதிக்குள் வீரப்பனால் நுழையவே முடியாது. அந்த அளவுக்கு காட்டுக்குள் நமது எல்லைப்பகுதியில் தமிழக அதிரடிப்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
வீரப்பன் இருக்குமிடம் தெரிந்தால் அடுத்த அரை மணி நேரத்தில் அவனது கதையை முடிக்கும் வகையில் திறம்படகாத்திருக்கிறது தமிழக அதிரடிப்படை. வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் இப்போது பொதுமக்களும் உதவிசெய்து வருகிறார்கள். அவர்களது உதவிக்கேற்ப பரிசுகளையும் வழங்கி வருகிறோம் என்றார் நடராஜ்.
தமிழக-கர்நாடக வன எல்லையில் முற்றுகை:
இதற்கிடையே கர்நாட காட்டுப் பகுதியில் இருக்கும் வீரப்பன் தமிழக காட்டுக்குள் வந்து விடாமல் தடுப்பதற்காகதமிழக, கர்நாடக காட்டு எல்லைப் பகுதியில் அதிரடிப்படை குவித்து வைக்கப்பட்டுள்ளது.
நாகப்பாவை வீரப்பன் கொன்றதாக கூறப்படும் செங்கடி காட்டுப் பகுதியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் தமிழககாட்டுப் பகுதியான மணியாச்சிப்பாளையம் என்ற இடம் உள்ளது. இந்த இடத்தில்தான் அதிரடிப்படையினர்குவித்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பகுதி வழியாக தமிழக எல்லைக்குள் அவன் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக நூற்றுக்கணக்கான வீரர்கள்தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல, கேத்தல் என்ற இடத்தில் அதிரடிப்படை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் வீரர்களுடன்முகாமிட்டுள்ளார். இந்தப் பகுதி வழியாகவும் வீரப்பன் தமிழகத்திற்குள் நுழையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறும் கர்நாடக அதிரடிப்படை வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். எப்படியும் இந்த இருஇடங்களில் ஒன்றின் வழியாக வீரப்பன் நுழையலாம் என்று போலீஸார் எதிர்பார்க்கிறார்கள்.
இதுதவிர வீரப்பன் மறைவிடங்களாக கருதப்படும் இடங்களை தேர்வு செய்து அந்த இடங்களில் மட்டுமேதற்போது அதிரடிப்படை வீரர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
வீரப்பனுடன் தமிழ்த் தீவிரவாதிகள்?
இதற்கிடையே வீரப்பனுடன் தமிழ் தீவிரவாதிகள் சிலரும் உள்ளனர் என்று தமிழக கூடுதல் டி.ஜி.பியான வை.பாலசந்திரன் கூறினார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்களிடம் விசாரணை நடத்தியபோது, வீரப்பனுடன் சில தமிழ்த் தீவிரவாதிகளும்காட்டில் சுற்றிக் கொண்டிருப்பதாகத் தெரிய வந்தது.
ஆனால் வீரப்பனுக்கு பயந்து அந்த மக்கள் அவனைப் பற்றி மேற்கொண்டு எதுவும் சொல்ல மறுக்கின்றனர்.நிதானமாக அவர்களிடம் விசாரணை நடத்தி உண்மையைத் தெரிந்து கொள்வோம்.
வீரப்பனைப் பிடிக்க தேவைப்பட்டால் மத்திய அரசு உதவியும் கோரப்படும் என்றார் பாலசந்திரன்.
-->
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications