வேஷ்டி, சேலைக்கு மாறிய கடலூர் கல்லூரி மாணவ-மாணவிகள்
கடலூர்:
கைத்தறி நெசவாளர்களுக்கு உதவும் வகையில் கடலூரைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவ, மாணவியர் தமிழகஅரசின் மலிவு விலை வேஷ்டி, சேலைகளை வாங்கத் தொடங்கியுள்ளனர்.
வறுமையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் ஏழை நெசவாளர்களுக்கு உதவுவதற்காக கடந்த சில மாதங்களுக்குமுன் மாநிலம் முழுவதும் "கஞ்சித் தொட்டி" திட்டத்தை திமுக அறிமுகப்படுத்தியது. இதற்குப் போட்டியாகநெசவாளர்களுக்கு இலவச முட்டை பிரியாணி வழங்குகிறோம் என்று அதிமுகவும் களத்தில் இறங்கியது.
இதைத் தொடர்ந்து மதுரையில் இரு கட்சியினருக்கும் இடையே பெரும் ரகளையே வெடித்தது. அரசியல் சாயம்பூசப்பட்டதால் ஏழை நெசவாளர்களின் வேதனை மேலும் அதிகரித்தது.
இந்நிலையில் வறுமையில் வாடும் தமிழக நெசவாளர்கள் துயர் துடைக்கும் விதமாக ரூ.20, ரூ.30 விலை கொண்டமலிவு விலை வேஷ்டி, சேலைகளை ரேஷன் கடைகள் மூலமாகவும், கோ-ஆப்டெக்ஸ் மூலமாகவும் தமிழக அரசுவிற்பனை செய்யத் தொடங்கியது.
இந்தக் கைத்தறி சேலைகள் கல்லூரி மாணவிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. எனவே மலிவு விலை சேலைகளின்விற்பனை தமிழகத்தின் பல இடங்களிலும் சக்கை போடு போட்டு வருகிறது.
தற்போது இந்த மோகம் மாணவர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. கடலூர் புனித வளனார் கல்லூரிமாணவர்களும், மாணவிகளும் மலிவு விலை வேஷ்டி, சேலைகளுடன் தங்களது கல்லூரிக்கு வந்துநெசவாளர்களுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
சுடிதார்களாலும், ஜீன்ஸ் பேண்ட்டுகளாலும் இவ்வளவு நாட்களும் களைகட்டிக் கொண்டிருந்த இந்தக் கல்லூரியில்கடந்த சில நாட்களாக கைத்தறி சேலைகளும், வேஷ்டிகளும்தான் தூள் கிளப்புகின்றன.
"நாங்கள் என்ன குறைந்தவர்களா?" என்று கல்லூரி ஆசிரியர்களும், ஆசிரியைகளும் கூட மலிவு விலை வேஷ்டி,சேலையில் வந்து அசத்தி மாணவ, மாணவியரின் "அப்ளாஸ்"களைப் பெற்றனர்.
நெசவாளர்கள் துயர் துடைக்கும் வகையில் ஏராளமான செட் வேஷ்டி, சேலைகளை வாங்கியுள்ளதாகமாணவர்களும், மாணவிகளும் தெரிவித்தனர்.
இனியும் தொடர்ந்து வாங்கப் போவதாகவும் கூறியுள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications