ஜெ. புகார்களுக்கு கிருஷ்ணா மறுப்பு
பெங்களூர்:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவின் கொலை தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியகுற்றச்சாட்டுக்களை அம்மாநில முதல்வர் கிருஷ்ணா மறுத்துள்ளார். இது தொடர்பாக ஜெயலலிதாவுக்குஉடனடியாக பதில் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார் கிருஷ்ணா.
நாகப்பாவை தமிழக அதிரடிப்படையினர்தான் கொன்று விட்டனர் என்ற தொணியில் கர்நாடக உள்துறைஅமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே பத்திரிக்கைகளுக்குப் பேட்டியளித்தாகச் செய்திகள் வெளியாகின.
இதைச் சுட்டிக் காட்டி கிருஷ்ணாவுக்குக் கடிதம் எழுதிய ஜெயலலிதா, உண்மையில் நாகப்பாவைக் கொன்றதுகர்நாடக அதிரடிப்படையினர்தான் என்றும் அதில் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து கிருஷ்ணாவும் ஜெயலலிதாவுக்கு உடனடியாகப் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,
உங்கள் குற்றச்சாட்டு குறித்து உடனடியாக கார்கேயை வரவழைத்து விசாரித்தேன். தான் அவ்வாறு எந்தக்குற்றச்சாட்டையும் தமிழக அதிரடிப்படையினர் மீது சுமத்தவில்லை என்று அவர் கூறினார்.
நாகப்பாவின் உடல் கிடந்த இடத்திற்கு அருகே மற்றொரு உடல் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளீர்கள்.ஆனால் இது தவறான ஒரு தகவல். நாகப்பாவின் உடலைத் தவிர வேறு எந்த உடலும் மீட்கப்படவில்லை.
இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு எதையும் மூடி மறைக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.
வீரப்பனைப் பிடிக்க வேண்டும் என்பதையே நாம் முக்கிய லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்று உங்கள்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். அதை நான் வரவேற்கிறேன் என்று அக்கடிதத்தில் கூறியுள்ளார் கிருஷ்ணா.
இதற்கிடையே நிருபர்களிடம் பேசிய கார்கேயும் ஜெயலலிதாவின் புகார்களைக் கடுமையாக மறுத்தார். சிலபத்திரிக்கைகள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன என்றும், அதை ஜெயலலிதா கருத்தில் கொள்ளக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications