டிராக்டருடன் மோதி தீப்பிடித்த லாரி தாறுமாறாக ஓடி கடைகள், வீடு, ஆட்டோக்கள் சாம்பல்
வாடிப்பட்டி:
சிவகாசியில் இருந்து தீப்பெட்டிகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி எதிரே வந்த டிராக்டருடன் மோதி தீப் பிடித்தது.
இந்த விபத்தையடுத்து தீயுடன் தாறுமாறாக ஓடிய அந்த லாரி, 4 கடைகளையும் இடித்துத் தள்ளிவிட்டு ஒரு வீட்டுக்குள் புகுந்துதலைகீழாகக் கவிழ்ந்தது.
இன்று அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டது. சிவகாசியில் இருந்து மும்பைக்குச் சென்று கொண்டிருந்த அந்த தீப்பெட்டி லாரிவாடிப்பட்டியில் எதிரே வந்த டிராக்டருடன் மோதியது. மோதிய வேகத்தில் டிராக்டர் தூக்கி வீசப்பட்டது. இதில் லாரியின் டீசல்டேங்க் வெடித்து தீப் பிடித்தது. லாரியில் இருந்த தீப்பெட்டிகளும் தீப் பிடித்துக் கொள்ளவே டிரைவர் அதில் இருந்து வெளியேகுதித்துத் தப்பினார்.
டிரைவர் இல்லாமலேயே தொடர்ந்து தாறுமாறாக ஓடிய இந்த லாரி ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த 3 ஆட்டோக்களை மோதித்தள்ளிவிட்டு மூடியிருந்த 2 கடைகள், ஒரு டீக்கடை, ஒரு உரக் கடை மீது மோதியது. இதில் ஆட்டோக்கள் அப்பளமாயின.அவற்றிலும் தீப் பிடித்துக் கொண்டது. கடைகளும் எரிந்து சாம்பலாயின.
தொடர்ந்து சென்ற அந்த லாரி ஒரு வீட்டுக்குள் புகுந்து கவிழ்ந்து, வெளியேறி மீண்டும் நேரானது. அதில் இருந்த தீப்பெட்டிகளும்லாரியும் முழுமையாக எரிந்து போயின.
ஆனால், இவ்வளவு நடந்தும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. லாரியின் டிரைவரும் மேலும் மூன்று பேரும் காயத்துடன்தப்பிவிட்டனர். கடைகளிலும் வீட்டுக்குள்ளும் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்தும் உடைந்தும் சேதமடைந்துவிட்டன.
காயமடைந்த லாரி டிரைவர், 2 ஆட்டோ டிரைவர்கள் மற்றும் ஒருவர் உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்டனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications