வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு- லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருச்சி:
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
சொர்க்க வாசல் வழியாக லட்சக்கணக்கான பக்தர்கள் நுழைந்து பெருமாளை தரிசித்த வண்ணம் இருக்கிறார்கள்.
வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி தமிழகத்தில் உள்ளபெரும்பாலான பெருமாள் கோவில்களிலும் இன்று அதிகாலை நடந்தது.
நேற்று இரவு முழுவதும் விழித்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், அதிகாலையில் சொர்க்க வாசல் வழியாகநுழைந்து பெருமாளை வணங்கினர்.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஷேத்திரமான ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமிகள், ரங்கநாயகிதாயார் சகிதம், அதிகாலை 4.15 மணிக்கு சொர்க்க வாசல் வழியாக நுழைந்து வந்த பக்தர்களுக்கு தரிசனம்கொடுத்தார்.
சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும், லட்சக்கணக்கான பக்தர்கள் "ரெங்கா... ரெங்கா..." என்று குரல் எழுப்பிக்கொண்டே சாரை சாரையாக உள்ளே நுழைந்து பெருமாளை தரிசித்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் உலகளந்த பெருமாள் கோவில், மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் உள்ளிட்ட முக்கியமானபெருமாள் கோவில்களிலும் இந்த சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
சென்னையில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் அடுத்த மாதம் வரும் ஏகதாசி தினத்தன்று சொர்க்க வாசல் திறப்புநிகழ்ச்சி நடைபெறும்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications