குஜராத் வெற்றி: சென்னையில் பட்டாசு வெடித்த 2 பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கைது
சென்னை:
குஜராத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றதையொட்டி சென்னையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய 2 தமிழக பா.ஜ.க.எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பா.ஜ.க. தொண்டர்களைப் போலீசார் கைது செய்தனர்.
குஜராத் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்றது. மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானஇடத்தைப் பிடித்துள்ளது பா.ஜ.க. தமிழகத்தில் உள்ள பா.ஜ.க. தொண்டர்களும் இந்த வெற்றியை பட்டாசுகள்வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.
இவ்வெற்றியைக் கொண்டாடும் விதமாக தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏக்களான கே.என். லட்சுமணனும், எச்.ராஜாவும் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்கா முன்பாகக் கூடினர். நூற்றுக்கும் மேற்பட்டபா.ஜ.க. தொண்டர்களும் அங்கு குவிந்தனர்.
பின்னர் இரண்டு எம்.எல்.ஏக்களும், பா.ஜ.க. தொண்டர்களும் குஜராத் வெற்றியைக் கொண்டாடும் விதமாகபட்டாசுகளை வெடித்தனர்.
இதனால் எப்போதும் பரபரப்பு மிகுந்த அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.நூற்றுக்கணக்கான பா.ஜ.கவினரோடு அதை வேடிக்கை பார்க்கும் மக்களும் அங்கு கூடியதால், சாலையில்வாகனங்களே செல்ல முடியவில்லை.
அண்ணா சாலையில் ஊர்வலம் செல்லவோ, பட்டாசு வெடிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
இதையடுத்து லட்சுமணனையும், ராஜாவையும் மேலும் 100 பா.ஜ.கவினரையும் போலீசார் கைது செய்துசிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகஅவர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த மற்ற பா.ஜ.க. தொண்டர்கள், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று கோரி சாலை மறியலில் இறங்கினர். சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தின் முன்பாகவும்தர்ணாவில் இறங்கினர். இதனால் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் பா.ஜ.கவின் அகில இந்திய செயலாளரான இல. கணேசன் அந்த போலீஸ் நிலையத்திற்குவிரைந்தார். போலீஸ் அதிகாரிகளுடன் பேசி கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு கோரினார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட அனைத்து பா.ஜ.கவினரையும் போலீசார் விடுதலைசெய்தனர்.
பின்னர் வெளியில் வந்த கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைதியான முறையில், சந்தோஷத்தைவெளிப்படுத்தும் விதத்தில் பட்டாசுகள் வெடித்த பா.ஜ.க. சட்டசபை தலைவர், எம்.எல்.ஏ. ஆகியோரைப்போலீஸார் கைது செய்தது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
ராஜா பேசுகையில், போலி மதச்சார்பின்மை பேசிக் கொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு விலகி நின்றுதனியாக செயல்படலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த சில கட்சிகளுக்கு, அவர்களின் முடிவை மறு பரிசீலனைசெய்ய வைக்கும் அளவுக்கு குஜராத் தேர்தல் முடிவு அமைந்துள்ளது என்றார்.
முன்னதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறித்து தவறான செய்திகளை வெளியிட்டதாகக் கூறி "தி ஹிந்து"ஆங்கில நாளிதழின் நகல்களை அக்கட்சியின் தொண்டர்கள் எரித்தனர்.
-->
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications