சிகரெட், மது பாட்டிலுடன் தோன்றும் டி.வி. நடிகர்கள் மீது ராமதாஸ் பாய்ச்சல்
சென்னை:
வாயில் சிகரெட்டும், கையில் மது பாட்டிலும் இல்லாமல் டிவி சீரியல்களில் நடிக்க முடியாது என்று கருதும்நடிகர்கள் நடிக்க வராமல் வேறு ஏதாவது வேலைக்குப் போவது நல்லது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கூறினார்.
"தமிழன் டிவி" என்ற டிவி சானலின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவைத் தொடங்கி வைத்தடாக்டர் ராமதாஸ் பின்னர் பேசுகையில்,
சமீப காலமாக டிவி சீரியல்களில் தமிழ் கலாச்சாரத்திற்கு விரோதமான காட்சிகள் பெரும்பாலும் வரத் தொடங்கிவிட்டன.
சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் வாயில் சிகரெட் புகையோடு வருவதையே ஸ்டைலாக மாற்றியுள்ளனர். இதுஇளைஞர்களைக் கெடுக்கும் செயலாகும்.
சிகரெட்டும், மதுவும் இல்லாமல் நடிக்க முடியாது என்றால் அவர்கள் நடிக்கவே தேவையில்லை. வேறு ஏதாவதுவேலைக்கு போகட்டும். தமிழர் கலாச்சாரத்தை கெடுக்கும் எந்த செயலையும் அனுமதிக்கவே முடியாது என்றார்ராமதாஸ்.
நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் ஸ்டைலாகப் புகைபிடிப்பது தமிழக இளைஞர்களை மிகவும் கெடுத்து விட்டதாகக்கடந்த சில நாட்களாகக் கூறி வந்த டாக்டர் ராமதாஸ், தற்போது டி.வி. நடிகர்களையும் கடுமையாகத் தாக்கிப்பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், பாமக தலைவர் ஜி.கே. மணி, காங்கிரஸ் தலைவர்களில்ஒருவரான அன்பரசு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-->
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications