22ம் தேதி காவிரி ஆணையக் கூட்டம்?
டெல்லி:
காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் வரும் 22ம் தேதி பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடக்கும் என்று தெரிகிறது.
கடந்த மாதம் நடக்க இருந்த ஆணையக் கூட்டம் முதல்வர் ஜெயலலிதாவால் தடைபட்டது. கடைசி நேரத்தில் தனது டெல்லிபயணத்தை உடல் நலத்தைக் காரணம் காட்டி ஜெயலலிதா ரத்து செய்தார். மேலும் கேரள முதல்வர் ஆண்டனியும் வரவில்லை.இதனால் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் ஒத்தி வைத்தார்.
கடிதத்தில் ஜெ. வருத்தம்:
இந் நிலையில் வரும் 21ம் தேதி டெல்லியில் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் நடக்கிறது. இதில் அனைத்து மாநிலமுதல்வர்களும் பங்கேற்கின்றனர். கர்நாடக, கேரள, பாண்டிச்சேரி முதல்வர்கள் டெல்லியில் இருக்கும்போது, 22ம் தேதியேகாவிரி ஆணையத்தைக் கூட்டலாம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா யோசனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வாஜ்பாய்க்கு அவர் கடிதமும் எழுதியுள்ளார். அதில், கடந்த காவிரி ஆணையக் கூட்டத்தில் கடைசிநேரத்தில் தன்னால் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு முதல்வர் ஜெயலலிதா வருத்தமும் தெரிவித்துள்ளார்.
இதனால் 22ம் தேதி காவிரி ஆணையக் கூட்டத்தை பிரதமர் கூட்டலாம் என்று தெரிகிறது.
இந்தக் கூட்டம் முடிந்த பின்னர் தான் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா மீது தமிழகம் தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் தீர்ப்புவழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணாவின் கோரிக்கை:
அதே நேரத்தில் தமிழக, கேரள முதல்வர்கள் டெல்லியில் இருக்கும்போதே வீரப்பனைப் பிடிப்பது குறித்து முதல்வர்கள் கூட்டத்தைபிரதமர் கூட்ட வேண்டும் என கர்நாடகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கர்நாடக முதல்வர் கிருஷ்ணா பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், 22ம் தேதி வீரப்பன்விவகாரம் குறித்துப் பேச தமிழக, கர்நாடக, கேரள முதல்வர்களின் கூட்டத்தை வாஜ்பாய் கூட்ட வேண்டும் எனவும், அக்கூட்டத்தில் துணைப் பிரதமர் அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரையும் பங்கேற்றகச் செய்யவேண்டும் எனவும் கோரியுள்ளார்.
கிருஷ்ணாவின் இந்தக் கோரிக்கையையும் பிரதமர் ஏற்பார் என்றே தெரிகிறது. எனவே, வரும் 22ம் தேதி காவிரி மற்றும்வீரப்பன் ஆகிய விவகாரங்கள் குறித்து டெல்லியில் கூட்டம் நடக்கலாம்.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications