சார், அங்கிட்டு போங்க.. எங்கிட்ட பேசாதீங்க: நிருபர்களிடம் கெஞ்சிய போலீசார்
சென்னை:
பத்திரிக்கை நிருபர்களிடம் கான்ஸ்டபிள்களைப் பேச அனுமதித்த டி.ஜி.பி. அலுவலகத்தைச் சேர்ந்த 30போலீசாருக்கு மெமோ அனுப்பப்பட்டுள்ளது.
நேற்று முதல் கடை நிலைக் காவலர்களிடம் (கான்ஸ்டபிள்) குறைகள் கேட்டு வருகிறார் தமிழக டி.ஜி.பி.நெய்ல்வால்.
நேற்று மட்டும் சுமார் 2,000 கான்ஸ்டபிள்கள் தங்கள் குடும்பங்களுடன் வந்து குறைகளைத் தெரிவித்தனர்.இடமாற்றம், மருத்துவப்படிகள், வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள்டி.ஜி.பியிடம் தெரிவித்தனர்.
நேற்று நடந்த நிகழ்ச்சியின்போது கான்ஸ்டபிள்கள் தங்களது குறைகள் குறித்து நிருபர்களிடமும் புலம்பல்களுடன்தெரிவித்திருந்தனர். இந்தக் குறைகேட்கும் நிகழ்ச்சி வெறும் கண்துடைப்புதான் என்பதை நிருபர்களிடம் அவர்கள்விளக்கினர்.
இந் நிலையில் இந்த கண்துடைப்பு குறைகேட்பு நிகழ்ச்சி 2வது நாளாக இன்றும் நடந்தது. சேலம், வேலூர், கடலூர் ,திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,000 போலீஸார் குறைகளைக் கூறுவதற்காகஇன்று குவிந்திருந்தனர்.
ஆனால் இந்த நிகழ்ச்சி நடந்தபோது டி.ஜி.பி. அலுவலக வளாகத்திற்குள் நுழைய நிருபர்களுக்கு திடீர் எனத் தடைவிதிக்கப்பட்டது.
அங்கு காவலுக்கு நின்றிருந்த போலீசாருக்கும், குறை சொல்ல வந்த போலீஸாருக்கும் நிருபர்களுடன் பேசத் தடைவிதிக்கப்பட்டது. இதனால் நிருபர்களைக் கண்டவுடன் போலீசார் அங்கிருந்து தெறித்து ஓடினர். நிருபர்கள் மீறிப்போய் பேசினாலும் முகத்தை திரும்பிக் கொண்டு கடுகடுத்தனர்.
அங்கிட்டு போங்க சார், எங்களை பாக்குறாங்க.. என் கிட்ட பேசாதீங்க சார்.. சொன்னா கேளுங்க என்று கெஞ்சினர்.
இந் நிலையில் நேற்று நிருபர்களை குறை சொல்ல வந்த போலீஸாருடன் பேச அனுமதித்ததாக 30 டி.ஜி.பி.அலுவலக போலீஸாருக்கு விளக்கம் கேட்டு மெமோ அனுப்பப்பட்டுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications