ரூ.1,00,000 கோடி மதிப்பில் நதிகளை இணைக்க நிபுணர் குழு அமைப்பு
டெல்லி:
நாட்டில் உள்ள முக்கிய நதிகளை இணைப்பதற்காக ரூ.1 லட்சம் கோடியில் மாபெரும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.இத் திட்டத்தை அமலாக்க முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் சிறப்பு நிபுணர் குழுஅமைக்கப்பட்டுள்ளது.
இத் தகவல்களை மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் திருநாவுக்கரசர் நாடாளுமன்றத்தில்தெரிவித்தார்.
மத்திய மின்துறை அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு மிகச் சிறந்த நிர்வாகியாவார். தேசிய அளவில் மின்துறையில்பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். பிரதமர் வாஜ்பாய் உள்பட அனைவராலும் பாராட்டப்பட்டவர்.சார்ட்டட் அகெளண்ட்டன்ட் ஆன இவர் சிவசேனையின் எம்.பியாவார்.
சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேவுக்கும் இவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதால் அமைச்சர் பதவியில் இருந்துவிலகினார். ஆனாலும், பிரதமர் வாஜ்பாய் இவருக்கு முக்கிய பதவி ஏதாவது தர காத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் நதிகள் இணைப்புத் திட்டம் இவர் வசம் தரப்பட்டுள்ளது. இது கேபினட் அமைச்சர் பதவிக்குஇணையான பதவியாகும் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் மக்களவையில் அமைச்சர் திருநாவுக்கரசு பேசுகையில்,
வரும் 2016ம் ஆண்டு இறுதிக்குள் நதிகளை இணைப்பது என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத் திட்டத்தைநிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்காக பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கியஉயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படும்.
முன்னாள் மத்திய அமைச்சரான சுரேஷ் பிரபு இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குவார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் நதிகளை இணைப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சுமார் 10 ஆண்டுகளில்இந்தத் திட்டத்தை நிறைவேற்றி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்
இந்தக் குழுவில் சி.சி. படேல் துணைத் தலைவராகவும், சி.டி. தட்டே உறுப்பினர் செயலாளராகவும்நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்துறை நிபுணர்கள் இக்குழுவில் பகுதி நேரஉறுப்பினர்களாக இருப்பார்கள்.
இந்தக் குழுவின் முழு அறிக்கையும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 30ம் தேதிக்குள் தயாராகி விடும். இதன் பிறகுதான்நதிகள் இணைப்புக்கான நிதி திரட்டுவது குறித்து முடிவெடுக்கப்படும்.
எப்படியும் இவை அனைத்தும் முடிந்து நதிகளை இணைக்கும் பணிகள் துவங்கவே குறைந்தபட்சம் இரண்டுஆண்டுகளாவது ஆகும் என்று தெரிகிறது.
சுரேஷ் பிரபு தலைவராக இருப்பதால் இத் திட்டம் வேகம் பிடிக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
இந்தக் குழு தொடர்பான ஒரு அறிக்கையை அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி நேற்று உச்ச நீதிமன்றத்தில்சமர்ப்பித்தார். அதில்,
நாடு முழுவதும் 30 நதிகளை இணைப்பது தொடர்பாக நதிநீர் மேம்பாட்டு அமைப்பு ஆய்வு நடத்தியது. இவற்றில்6 நதிகளை இணைப்பது தொடர்பான ஆய்வறிக்கைகள் ஏற்கனவே தயாராகி விட்டன.
மேலும் அனைத்து நதிகளையும் இணைப்பதற்கான மொத்தச் செலவு இன்றைய மதிப்பின்படி ரூ.5.6 லட்சம் கோடிஆகும் என்று அவ்வறிக்கையில் சோலி சொராப்ஜி குறிப்பிட்டிருந்தார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications