நாடாளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கு: 3 பேருக்கு தூக்கு தண்டனை
டெல்லி:
கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தைத் தாக்கிய தீவிரவாதிகளுக்கு உதவி செய்த 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது. மற்றொரு பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் உள்ளே நுழைந்த 4 தீவிரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தினர்.ஆனால், பாதுகாவலர்கள் மிக சமயோஜிதமாக செயல்பட்டதால் துணை ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், எம்.பிக்கள் உயிர்தப்பினர்.
இந்தத் தாக்குதலில் 9 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் 4 பேரையும் சுட்டுக் கொன்றனர். இவர்கள்அனைவரும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்பது பின்னர் உறுதியானது.
தீவிரவாதிகளுக்கு டெல்லியில் தங்கியிருக்க இடம் கொடுத்ததாகவும், செல்போன்கள், கார், நாடாளுமன்ற வரைபடம் தந்துஉதவியதாகவும் தாக்குதல் திட்டத்தில் முழு உதவி செய்ததாகவும் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் கீலானி,ஜெய்ஷ்-ஏ-முகம்மத் அமைப்பின் தீவிரவாதிகளான முகம்மத் அப்சல், செளகத் ஹூசைன் குரு, ஹூசைனின் மனைவி அப்சான்ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த 4 பேர் மீதும், இப்போது பாகிஸ்தானில் சுதந்திரமாகக் திரியும் ஜெய்ஷ்-ஏ-முகம்மத் தலைவன் மெளலான மசூத் அஸார்,காஷ்மீரில் உள்ள இந்த அமைப்பின் கமாண்டர் காசி பாபா மற்றும் இன்னொரு தீவிரவாதியான தாரிக் அகமத் ஆகியோர் மீதும்இந்தியாவின் மீது போர் தொடுத்ததாகவும், பிரதமர் உள்ளிட்ட இந்தியத் தலைவர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகவும்வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அனைவர் மீதும் பொடா சட்டத்தில் வழக்குப் பதிவானது.
இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் நீதிபதி திங்ரா இன்று தனது தீர்ப்பை வழங்கினார்.
இதில் முகம்மத் அப்சல், செளகத் ஹூசைன் குரு, கீலானி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். குருவின்மனைவியான நவஜோத் சித்து என்ற அப்சான் குருவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 10,000 மும்அபராதம் விதிக்ககப்பட்டது. அதைக் கட்டாவிட்டால் மேலும் 6 மாதம் சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டது.
தீவிரவாதிகளின் திட்டத்தை மறைத்ததற்காக இந்தப் பெண்ணுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவருக்கு ஒரு கைக் குழந்தைஉண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் தலா ரூ. 5.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையைதீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கு பிரித்து அளிக்கவும் நீதிபதிஉத்தரவிட்டார்.
பொடா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மரண தண்டனையை எதிர்த்து 4பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வார்கள் என்று தெரிகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications