ரயில் என்ஜினுடன் மோதிய லாரி: முட்டாள்தனமாய் ஓட்டிய டிரைவர் உயிர் தப்பினார்
திருநெல்வேலி:
மண் ஏற்றி வந்த லாரி ஆள் இல்லாத ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ரயில் என்ஜின்மீது மோதியது. ஆனால், இதில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து மற்றும் கங்கைகொண்டான் ரயில் நிலையங்களுக்கு இடையேபாப்பான்குளம் என்ற இடத்தில் இச் சம்பவம் நடந்தது.
ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டு ஒரு அரைபாடி டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது. முருகன் என்பவர் அதைஓட்டி வந்தார். பாப்பான்குளம் ஆள் இல்லா ரயில்வே கேட்டை நெருங்கியபோது, ரயில் என்ஜின் ஒன்று வந்துகொண்டிருந்தது.
ஆனால், ரயிலைவிட வேகமாக ஓட்டி தண்டவாளத்தைக் கடந்து விட முடிவு செய்து லாரியை வேகமாக ஓட்டினார்முருகன். ஆனால் என்ஜின் படுவேகத்தில் வந்தது. இதையடுத்து லாரியின் மீது என்ஜின் மோதுவது உறுதி என்றநிலை உருவானதால் லாரியிலிருந்து கீழே குதித்தார் முருகன்.
அடுத்த வினாடியே ரயில் என்ஜின், லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரி தூக்கி எறியப்பட்டது. பலபல்டிகள் அடித்து பின்னர் நசுங்கி நிலையில் தண்டவாளத்தின் அருகே போய் விழுந்தது அந்த லாரி.
காயங்களுடன் தப்பியவிட்ட முருகன் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்து காரணமாக நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை ரயில் நிலையத்திலேயே ஒரு மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதேபோல, அனந்தபுரி, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களும் தாமதமாகின.
-->
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications