நாகப்பாவை மீட்கும் ஆபரேசனில் வீரப்பனால் கொல்லப்பட்டனரா?
மைசூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பன் காட்டுக்குள் கர்நாடக அதிரடிப்படையைச் சேர்ந்த 3 போலீசார் கடந்த 1ம் தேதி முதல்காணாமல் போய்விட்டதாகத் தெரிய வந்துள்ளது. ஆனால் இந்தச் செய்தியை அம்மாநில உள்துறை அமைச்சர்மல்லிகார்ஜுன கார்கே மறுத்தார்.
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடந்த 8ம் தேதி செங்கடி காட்டுப் பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார்.நாகப்பாவின் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து வீரப்பனைத் தேடும் பணியில் தமிழக, கர்நாடகஅதிரடிப்படையினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
நாகப்பாவின் உடல் கிடந்த சிறிது தூரத்தில் கர்நாடக அதிரடிப்படை வீரர் ஒருவரின் உடலும்கண்டெடுக்கப்பட்டாத தகவல்கள் வந்தன. இதனை தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் உறுதிசெய்தார்.
பின்னர் மேலும் இரு உடல்கள் கிடப்பதாகவும் அவையும் கர்நாடக அதிரடிப்படை வீரர்களின் உடல்கள் தான்எனவும் செய்திகள் வந்தன. ஆனால், அப்போது அதை கர்நாடக அரசு மறுத்தது. கர்நாடக அதிரடிப்படையில் 600போலீசார் உள்ளனர் என்றும், அவர்கள் அனைவருமே உயிருடன்தான் உள்ளனர் என்று அரசு தெரிவித்தது.
இந் நிலையில் இப்போது தனது படையைச் சேர்ந்த 3 வீரர்களைக் காணவில்லை என்ற செய்தியை மெதுவாகவெளியுலகுக்கு அரசு வட்டாரங்கள் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளன.
நாகப்பா கொல்லப்பட்டது 4ம் தேதி. இந்த மூன்று கர்நாடக அதிரடிப்படையினரும் வீரப்பன் காட்டில் கடந்த 1ம்தேதியே காணாமல் போய்விட்டதாக செய்திகள் வருகின்றன.
இதையடுத்து இவர்களைத் தேடும் பணியில் கர்நாடக அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.ஆனால், இந்தச் செய்தியை வெளியில் கசியவிட்ட கர்நாடக அரசே அதை மறுத்தும் உள்ளது.
கடந்த 4ம் தேதி செங்கடி காட்டுப் பகுதியில் கர்நாடக அதிரடிப்படையினருக்கும் வீரப்பனுக்கும் இடையேதுப்பாக்கிச் சண்டை நடந்திருக்கலாம் என்றும் அதில்தான் நாகப்பாவும் இந்த மூன்று அதிரடிப்படையினரும்உயிரிழந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
நாகப்பாவின் உடலை மட்டும் காட்டிலேயே விட்டுவிட்டு உயிரிழந்த மூன்று அதிரடிப்படை போலீசாரின்உடல்களை கர்நாடக அதிரடிப்படையினரே அப்புறப்படுத்தி விட்டார்களா என்றும் தெரியவில்லை. உடல்களைஅப்புறப்படுத்திவிட்டு வீரர்களைக் காணவில்லை என கர்நாடக அரசு பொய் சொல்வதாகவே தெரிகிறது.
மூன்று அதிரடிப்படையினர் காணவில்லை என்பதை சில உயர் அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.
கர்நாடக டி.ஜி.பி. மடியாளும் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே மாதேஸ்வரன் மலையில் நடக்கவிருந்த தமிழக, கர்நாடக அதிரடிப்படையினரின் ஆலோசனைக்கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரியவில்லை.
போலீஸ் நிலையத்தைத் தாக்க சதி
இந்நிலையில் சில போலீஸ் நிலையங்களைத் தாக்கி அங்குள்ள ஆயுதங்களைக் கொள்ளையடிக்க வீரப்பன்திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்திருப்பதால் தமிழக, கர்நாடக காட்டுப் பகுதிகளில் அருகே உள்ள 22போலீஸ் நிலையங்களை அதிரடிப்படையினர் தங்கள் நேரடிப் பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலையத்தில் வீரப்பன்கும்பல் அதிரடியாகப் புகுந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துக் கொண்டு ஓடியதுநினைவிருக்கலாம்.
இதற்கிடையே வீரப்பனைப் பிடிப்பதற்காக நவீன கருவிகள் மற்றும் படைகளை அனுப்ப வேண்டும் என்று கோரிமத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் நாகப்பாவைக் கடத்த வீரப்பனுக்கு உதவியதாகக் கூறப்படும் மூன்று முக்கியப் புள்ளிகள் குறித்ததகவல் போலீசாருக்குக் கிடைத்துள்ளது. அவர்கள் பதுங்கியுள்ள இடம் குறித்தும் தெரிய வந்துள்ளதாகவும் கூறியபோலீசார் வெகு விரைவில் அவர்களைக் கைது செய்யப் போவதாகத் தெரிவித்தனர்.
மடாதிபதிகள் வேண்டுகோள்:
இதற்கிடையே நாகப்பாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற அவருடைய ஜாதியைச் சேர்ந்த சில மடாதிபதிகள் வலியுறுத்தினர்.
நாகப்பாவின் உடல் மீட்கப்பட்ட 10வது தினத்தை அனுசரிக்கும் விதமாக மடாதிபதிகள் நேற்று இரவு ஒரு இரங்கல் கூட்டத்தை நடத்தினர். அதில் பேசிய மடாதிபதிகள்,
நாகப்பாவை வீரப்பன் கொன்றிருந்தால் அதை அவனே ஒப்புக் கொண்டிருப்பான். செய்த குற்றத்தை ஏற்றுக் கொள்வதையே இதற்கு முன் நடந்த சம்பவங்கள் தெளிவாக்குகின்றன.
எனவே நாகப்பாவை அவன் கொன்றிருக்க முடியாது என்று மடாதிபதிகள் கூறினர்.
இந்த இரங்கல் கூட்டத்தில் நாகப்பாவின் குடும்பத்தினர், அவருடைய ஜாதியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் கர்நாடக எதிர்க் கட்சி அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
-->
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications