பவானி ஆற்றில் புதிய அணை: மத்திய, கேரள, தமிழக அரசுகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
பவானி ஆற்றின் குறுக்கே கேரள மாநில அரசு புதிய அணை கட்டுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 3வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு கேரள, தமிழக மற்றும் மத்திய அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம்நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகி, கேரளாவில் பாய்ந்து, பின்னர் மீண்டும் தமிழகத்துக்குள் வரும்நதி பவானி. ஆனால், இந்த ஆற்றின் குறுக்கே பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே முக்காலி என்றஇடத்தில் அணையைக் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
இதனால் தமிழகத்துக்கு பவானி ஆற்று நீர் வருவது தடுக்கப்படும். இந்த அணை கட்டப்பட்டால், கோவை, ஈரோடுமற்றும் தஞ்சை மாவட்டத்தின் 3 லட்சம் ஹெக்டேர் பாசன நிலங்கள் காய்ந்து கருவாடாகும். ஏற்கனவே,கர்நாடகத்தின் திமிர் காரணமாக ஏராளமான தமிழக பாசன நிலம் வறண்டுவிட்டது.
இப்போது பவானி ஆற்று நீரும் நின்றுவிட்டால் தமிழகத்தின் நிலை படுமோசமாகிவிடும் என்பதால் அணை கட்டும்திட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபால்ஜி என்பவர் வழக்குத்தொடர்ந்துள்ளார்.
இந்த மனு வெள்ளிக்கிழமை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி நாகப்பன் ஆகியோர் அடங்கியடிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அணை கட்டும் திட்டம் தொடர்பாக 3 வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் துறைஅமைச்சகச் செயலாளர், கேரள மாநில நீர்ப்பாசனத்துறை செயலாளர் மற்றும் தமிழக பொதுப்பணித்துறைசெயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications