காவலர் செல்வராஜ் கொலை வழக்கு: 8 பேருக்கு 23ம் தேதி தண்டனை
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் கடந்த 1997ம் ஆண்டில் போக்குவரத்து போலீஸ்காரர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட8 பேருமே குற்றவாளிகள் தான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இவர்களுக்கு 23ம் தேதி நீதிமன்றம் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கும்.
கோயம்புத்தூர் உக்கடம் காவல் நிலையத்தைச் சேர்ந்த செல்வராஜ் கடந்த 1997ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி பணியில்ஈடுபட்டிருந்தார். அப்போது 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய செல்வராஜ் அபராதம் விதித்தார்.இதையடுத்து அவருக்கும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்து சென்ற அந்த 3 வாலிபர்களும் பெரும் கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு வந்தனர். காவலர் செல்வராஜைநடுரோட்டிலேயே வைத்து கண்டந்துண்டமாக வெட்டிக் கொன்றனர்.
இதையடுத்து ஏற்பட்ட வன்முறை மதக் கலவரமாக மாறியது. பஸ்கள் எரிக்கப்பட்டன, கடைகளும் வீடுகளும் சூறையாடப்பட்டன. இந்தவன்முறையை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக கோயம்புத்தூரில் 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தொடர் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 58 பேர்பலியாயினர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
இந்த காவலர் செல்வராஜ் கொலை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தக் கொலையில்தொடர்புடைய அல்-உம்மாவின் தலைவர் பாட்சாவின் மகன் சித்திக் அலி, அல்-உம்மா பொதுத் செயலாளர் முகம்மத் அன்சாரி உள்பட 9பேரைக் கைது செய்தனர். இதில் ஷாகுல் ஹமீத் என்பவர் சிறையிலேயே இறந்துவிட்டார். மற்ற 8 பேர் மீதும் கோவை இரண்டாவதுவிரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
கிட்டத்தட்ட 35 சாட்சிகள் இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டனர். கடந்த இரு வாரங்களுக்கு முன் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பிரேம் குமார் இன்று காலை வழங்கிய அதிரடித் தீர்ப்பில் இந்த 8 பேருமே குற்றவாளிகள் தான் என்றுஅறிவித்தார். பின்னர் குற்றவாளிகளிடம் கருத்துக்களைக் கேட்ட நீதிபதி, இவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பது குறித்துஇன்று பிற்பகலில் தொடர்ந்து விவாதம் நடக்கும் என்று அறிவித்தார்.
அரசு மற்றும் குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் இன்று பிற்பகலில் விவாதம் நடத்தினர். இதன் பின்னர் பேசிய நீதிபதி, குற்றவாளிகள் 8பேருக்கும் என்ன தண்டனை அளிப்பது என்பது குறித்து 23ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றார்.
இந்த விசாரணை நடந்து வருவதையொட்டி நீதிமன்றத்துக்கு மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. மேலும் நீதிபதிக்கு மிரட்டல்கடிதங்கள் வந்தததையடுத்து அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பையடுத்து கோவையில் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்துவிடாமல் தடுக்க நகர் முழுவதுமே போலீஸார் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications