மூப்பனார் படத்தால் இளங்கோவன், வாசன் இடையே மோதல்
சென்னை:
காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் அட்டையில் மூப்பனார் படத்தை சேர்ப்பதற்கு செயல் தலைவர் இளங்கோவன்உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் இளங்கோவனுக்கும், கட்சியின் அகில இந்திய செயலாளர் ஜி.கே.வாசனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாக உறுப்பினர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதற்காக புதிய உறுப்பினர் அட்டைகள்அச்சடிக்கப்படவுள்ளன.
இந்த அட்டைகளில் காமராஜர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோருடைய சிறிய படங்ளும், பெரிய சைஸில்காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் படமும் இடம்பெறுவதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உறுப்பினர் அட்டையில் மூப்பனார் படத்தையும் சேர்க்க வேண்டும் என்று வாசன் தரப்பினர்கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இளங்கோவன் இதை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்த கட்சியாகி வெகு நாட்களாகி விட்டது. மூப்பனார் படத்தைப் போடுவது என்றால்மறைந்த காங்கிரஸ் தலைவர்களாகிய மரகதம் சந்திரசேகர், வாழப்பாடி ராமமூர்த்தி உள்ளிட்டோருடையபடங்களையும் போட கோரிக்கை வரும். எனவே மூப்பனார் படத்தை போடாமல் இருப்பதே சரி என்றுஇளங்கோவன் கூறிவிட்டார்.
ஆனால், கண்டிப்பாக மூப்பனார் படம் வேண்டும் என்று வாசனும் தெளிவாகக் கூறி விட்டார். அவரது கருத்துக்குகட்சித் தலைவர் சோ. பாலகிருஷ்ணனும் ஆதரவு தெரிவித்துள்ளார். இவரும் மூப்பனாரின் தமிழ் மாநிலகாங்கிரசில் இருந்து தான் காங்கிரசுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது எழுந்துள்ள இந்த விவகாரத்தைத் தொடர்ந்து இளங்கோவனுக்கும் வாசனுக்கும் இடையே விரிசல்ஏற்பட்டுள்ளது.
இதனால், இந்தப் பிரச்சினையை இப்போது சோனியாவிடமே கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.-
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications