""நான் சகுனி அல்ல... சாக்ரடீஸ்"": கருணாநிதி
சென்னை:
நான் சாக்ரடீஸாக இருக்க விரும்புகிறேன். சகுனியாக அல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் 81வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டிஅக்கட்சியின் சார்பில் சென்னை தங்கச்சாலை பகுதியில் நேற்றிரவு பொதுக்கூட்டம் நடந்தது.
அந்தக் கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவருடைய உரையிலிருந்து சில பகுதிகள்:
கட்டாய மதமாற்ற சட்டத்தைக் கொண்டு வர எம்.ஜி.ஆர். நினைத்தார் என்று ஜெயலலிதா கூறுகிறார். இதை யாரும்நம்ப மாட்டார்கள்.
பெரியார் எழுதிய புத்தகத்திற்கு இருந்த தடையை நீக்கியவர் எம்.ஜி.ஆர். அவர் மதமாற்றத்தைத் தடை செய்யநினைத்திருப்பார் என்று கூறினால் யாராவது நம்புவார்களா?
அண்ணா, பெரியார் வழியில் நடப்பதாக ஜெயலலிதா கூறக் கூடாது. அண்ணாவையும், பெரியாரையும்அவமதிப்பதை இனியும் பொறுத்தக் கொள்ள மாட்டோம்.
ஒரு மதத்தின் சார்பாக நீங்கள் நடப்பது என்று முடிவு செய்து விட்டால் முதலில் அண்ணா, பெரியார் படங்களைஅகற்றி விட்டு பின்னர் என்ன செய் நினைக்கிறீர்களோ அதை செய்து கொள்ளுங்கள்.
நான் ஒன்றும் பெரிய சாணக்கியன் இல்லை என்று அதிமுக பொதுக்குழுவில் கூறப்பட்டுள்ளது. ரொம்பசந்தோஷம். சாணக்கியன் என்றால் சகுனி என்று பொருள். நான் சாணக்கியனாக உயிரோடு இருப்பதைவிட,சாக்ரடீஸாக சாவதையே விரும்புகிறேன்.
என்னையும் அன்பழகனையும் பிரிக்க சில சதிகள் நடந்தன. ஆனால் அதை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டார் அன்பழகன்.
திமுகவின் மூலமாக தமிழர்களுக்கும், திராவிட கலாச்சாரத்திற்கும் தொண்டு செய்து வரும் அன்பழகனை இந்தநேரத்தில் பாராட்டுவது நமது கடமை என்றார் கருணாநிதி.
-->
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications