டெல்லியில் நவீன மெட்ரோ ரயில் போக்குவரத்து ஆரம்பம்
டெல்லி:
ஜப்பான் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நவீன மெட்ரோ ரயில் சேவை டெல்லியில் இன்று தொடங்கிவைக்கப்பட்டது. பிரதமர் வாஜ்பாய் இந்த ரயில் சேவையை துவக்கி வைத்தார்.
மும்பைக்கு அடுத்தபடியாக இது நாட்டின் இரண்டாவது பாதாள ரயில் சேவையாகும். அதே நேரம் இது வெளிநாட்டு டியூப்ரயில்களுக்கு இணையாக மிக நவீனமானது.
இன்று காலை சீலாம்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த ரயிலை இயக்கி வைத்த வாஜ்பாய் அதில் சுமார் 10 கி.மீ. தூரம்துணைப் பிரதமர் அத்வானியுடன் பயணம் செய்தார். சஹ்தாரா- திஸ் ஹஸாரி ரயில் நிலையங்களுக்கு இடையே முதல் கட்டமாகஇந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த மெட்ரோ ரயில்கள் மூலம் ஒரு நாளைக்கு 2 லட்சம் பேர் பயணிகள் பலனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 63கி.மீ. தூரத்துக்கு இந்த ரயிலின் தூரம் நீட்டிக்கப்பட உள்ளது. 2005ம் ஆண்டு இந்தப் பணி முடிவடையும். அப்போது இதில் 28லட்சம் பயணிகள் பயணம் செய்வர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ. 10,571 கோடியில் இந்த மெட்ரோ ரயில் திட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை மத்திய அரசு, டெல்லி மாநிலஅரசு மற்றும் ஜப்பான் நாடு ஆகியவை வழங்கின. இதில் ஜப்பானின் முதலீடு ரூ. 2,090 கோடியாகும்.
ஜப்பான் வடிவமைத்துள்ள இந்த ரயில்களும் ரயில் நிலையமும் மிக நவீனமானவை.
முழுக்க முழுக்க ஏர்-கண்டிசன் செய்யப்பட்ட ரயில் பெட்டிகளின் கதவுகள் தானே மூடித் திறக்கும் ஆட்டோமெட்டிக் வசதிஉடையவை.
மேலும் இதன் ரயில் நிலையங்களும் மிக நவீனமாக உருவாக்கப்பட்டுள்ளன. தானியங்கி டிக்கெட் கவுண்டர்கள்,எஸ்கலேட்டர்கள், லிப்டுகள், உடல் ஊனமுற்றவர்களுக்கு வசதியான பாதைகள், பயணிகளுக்கு ரயிலின் வருகை நேரம் குறித்தடிஜிட்டல் போர்டுகள், ஒலிப்பெருக்கிகள் மூலமான விவர அறிவிப்பு என ரயில் நிலையங்கள் மிக நவீனமாகவடிவமைக்கப்பட்டுள்ளன.
ஜப்பானின் இந்த தொழில்நுட்பத்தை கொங்கன் ரயில்வே தான் டெல்லியில் திறம்பட அமலாக்கியுளளது.
ரயில் பெட்டிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கும் வகையில் தீப்பிடிக்காத வகையில் அவை உருவாக்கப்பட்டுள்ளன.மேலும் ரயில்கள் நேருக்கு நேர் மோதுவதைத் தவிர்க்க நவீன கருவிகளும் பொறுத்தப்பட்டுள்ளன.
இதே போன்ற மெட்ரோ ரயில் போக்குவரத்துகள் பெங்களூரிலும் ஹைதராபாத்திலும் துவக்கப்படும் என மத்திய அரசுஅறிவித்துள்ளது.
-->
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications