கடினமாகிறது ப்ளஸ் டூ செய்முறை தேர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ப்ளஸ் டூ தேர்வில் செய்முறைத் தேர்வுகளின் (பிராக்டிகல்ஸ்) முறை மாற்றி அமைக்கப்பட உள்ளது.

இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களுக்கு செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத்தேர்வுக்கு 50 மதிப்பெண் தரப்படும். இதிலும் எழுத்துத் தேர்விலும் சேர்த்து 70 மதிப்பெண்கள் எடுத்தால் பாஸ்.

இந்த பிராக்டிகல் தேர்வுகளை அந்ததந்த பள்ளியின் ஆசிரியர்களே நடத்தி வந்தனர். மாணவர்களுக்குத் தர வேண்டியபிராக்டிகல்ஸ் குறித்து அந்தந்த பள்ளி ஆசிரியர்களே முடிவு செய்து வந்தனர்.

இனி மேல் இந்தத் தேர்வுகளையும் கல்வித்துறையே நடத்த உள்ளது. மாணவர்களுக்கான பிராக்டிகல்ஸ் கேள்வித் தாள்கள் இனிமுதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்தே அனுப்பப்படும். ஒவ்வொரு மாணவனுக்கும் என்ன பிராக்டிகல் தேர்வு தரப்படவேண்டும் என்பதும் அந்த வினாத் தாள்களிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். மாணவரின் பெயரும் அவருக்கான தேர்வும்பட்டியலில் இருக்கும்.

அதே போல இந்த பிராக்டிகல்ஸ் தேர்வை நடத்த வெளி பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.இதனால் இனி ப்ளஸ் டூ பிராக்டிகல் தேர்வுகள் மிகவும் கடினமாகப் போவது உறுதி.

பிராக்டிகல் தேர்வை கடினப்படுத்தும் தமிழக அரசின் முயற்சி சரிதான். ஆனால், பள்ளிகளில் லேப்கள் ஒழுங்காகஇருக்கின்றனவா என்பதையும் அரசு பார்க்க வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் முழுமையான லேப்களே கிடையாது.பிராக்டிகல் பயிற்சிக்குத் தேவையான எல்லா கருவிகளும் இருப்பதில்லை.

இந் நிலையில் தேர்வை மட்டும் கடினமாக்குவதால் மாணவர்கள் பாதிக்கப்படப் போவது மட்டும் தான் மிச்சம்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+