பழைய வழக்கு தோண்டி எடுப்பு: நீதிமன்றத்தில் திருமாவளவன் சரண்
சென்னை:
5 ஆண்டுகளுக்கு முன் விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய பேரணியின்போது பொதுச் சொத்துக்களைத் தாக்கிசேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கை போலீசார் இப்போது தோண்டி எடுத்துள்ளனர். இது தொடர்பாகதிருமாவளவனைக் கைது செய்யவும் முயன்று வருகின்றனர். இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பல ஆண்டுகளுக்கு முன் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேலவளவு என்ற இடத்தில் பஞ்சாயத்துத்தலைவர் முருகேசன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து கடந்த 1997ம் ஆண்டு திருமாவளவன் தலைமையில் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள்பேரணி நடத்தினர். படாளம் பகுதியில் நடந்த இந்தப் பேரணியின்போது டிராபிக் சிக்னல் விளக்கு உடைக்கப்பட்டதாகதிருமாவளவன் உள்பட 41 பேர் மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர்.
ஐந்து ஆண்டுகளாக இதுகுறித்து எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் கடந்த இரண்டு நிாட்களாக திருமாவளவனைத் தேடிவருவதாக போலீஸார் திடீர் என அறிவித்தனர். கோர்ட் பிடிவாரண்ட்டுடன் போலீஸார் தேடியதால் திருமாவளவன்தலைமறைவானார்.
இந்நிலையில் இன்று காலை சென்னை எழும்பூர் முதலாவது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திருமாவளவன்சரணடைந்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவாரண்ட் உத்தரவை ரத்துசெய்தார் நீதிபதி முனிரத்னம்.
மேலும் வரும் 26ம் தேதி திருமாவளவன் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிஉத்தரவிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் திருமாவளவன் பேசுகையில்,
மதமாற்றத் தடைச் சட்டம் மூலம் இந்துத்துவா கொள்கைகளைத் திணிக்க முயலும் அதிமுக அரசின் செயற்பாடுகளைவேரறுக்கும் முயற்சியில் எங்கள் அமைப்பு ஈடுபட்டுள்ளதால்தான் பழைய வழக்கை மாநில அரசுதோண்டியெடுத்துள்ளது. இதனால் என்னைக் கைது செய்வும் நினைக்கிறார்கள்.
பெயர் மாற்றப் போராட்டம், கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை எதிர்த்து நான் போராட்டம் நடத்தியது ஆகியவை இந்தஆட்சியாளர்களுக்கும் அவர்களின் பின்னணியில் இருக்கும் மதவாத சக்திகளுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
5 ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்தக் கல்வீச்சுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. சென்னையில் நடந்தபேரணிக்கு நான் தலைமை தாங்கினேன், அவ்வளவுதான்.
கல்வீச்சு தொடர்பான வழக்கில் திருமாவளவன் சஞ்சீவி என்பவர்தான் சம்பந்தப்பட்டுள்ளார். அவரும் ஏற்கனவேஇது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டார்.
அதே பெயரில் நான் இருப்பதால் தற்போது தேவையே இல்லாமல் என்னையும் அவ்வழக்கில் சேர்த்துள்ளனர்.இந்த 5 ஆண்டுகளும் போலீசார் என்ன செய்து கொண்டிருந்தார்கள். ஆஜராகும்படி கூறினால் ஆஜராகிவிட்டுப்போகிறேன்.
தமிழக அரசு வேண்டுமென்றே என் மீது பொய் வழக்கை ஜோடித்துள்ளது. என் மீது பொய் வழக்கு போட்ட தமிழகபோலீசாருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்வேன் என்றார் திருமாவளவன்.
திருமாவளவன் நீதிமன்றம் வந்ததயாைெட்டி பெரும் எண்ணிக்கையிலான அவரது கட்சித் தொண்டர்கள் அங்குகுவிந்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, நேற்று இரவு திருமாவளவன் பெரம்பலூர் சென்று கொண்டிருப்பதாக வந்த தகவலையடுத்து வண்டலூர்அருகே சென்று கொண்டிருந்த அவரது காரைப் போலீசார் வழிமறித்தனர். ஆனால் காரில் அவர் இல்லை.இதையடுத்து அந்தக் காரைப் பறிமுதல் செய்த போலீசார், அதில் இருந்த தலித் ரமேஷ் மற்றும் தமிழ் முதல்வன்ஆகியோரைக் கைது செய்து வேப்பேரி காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தனர்.
தகவல் அறிந்ததும் கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவு செயலாளர் வீரமுத்து தலைமையில் கட்சி நிர்வாகிகள்வேப்பேரி காவல் நிலையத்திற்கு விரைந்தனர். அங்கு அதிகாரிகளிடம் கூறி கைது செய்யப்பட்ட இருவரையும்,பறிமுதல் செய்யப்பட்ட காரையும் மீட்டனர்.
திருமாவளவன் கைதாகலாம் என்ற செய்திகள் வெளிவந்ததையடுத்து, வட மாவட்டங்களில் தலித் மக்கள் வசிக்கும்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-->












Click it and Unblock the Notifications