திருச்செங்கோட்டில் பயங்கர வெடிவிபத்து: பட்டாசு கிடங்கு உரிமையாளர் பலி
திருச்செங்கோடு:
திருச்செங்கோட்டில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் பட்டாசுக் கிடங்கு உரிமையாளர் ஒருவர் உடல் சிதறிபரிதாபமாக பலியானார். இச்சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
திருச்செங்கோட்டில் உள்ள வீரராகவ முதலியார் தெருவைச் சேர்ந்த தணிகாசலம் (50) என்பவர் தேரடி வீதியில்பட்டாசுக் கடை வைத்து நடத்தி வந்தார். இந்தக் கடையையே பட்டாசுக் கிடங்காகவும் அவர் பயன்படுத்தி வந்தார்.
சிவகாசியிலிருந்து பட்டாசுகளை வாங்கி வந்து இங்கு வைத்து விற்பனை செய்வதற்கு மட்டும்தான் அவருக்குஉரிமம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தணிகாசலம் தன் வீட்டிலேயே சொந்தமாகப் பட்டாசுகளைத் தயாரித்துவந்தார்.
புத்தாண்டு நெருங்கி வருவதையொட்டி புதிய பட்டாசுகளைத் தயாரிக்கும் பணி அவருடைய வீட்டில் முழு வீச்சில்நடந்து வந்தது.
இந்நிலையில் நேற்று தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை பேக்கிங் செய்து கொண்டிருந்தபோது, திடீரென்று பட்டாசுகள்வெடிக்க ஆரம்பித்தன. இதனால் அங்கு குவிந்திருந்த மற்ற பட்டாசுகளும் பயங்கரமாக வெடித்தன.
இதில் தணிகாசலம், அவருடைய மனைவி திலகவதி மற்றும் பழனி, சின்னுசாமி என்ற ஊழியர்கள் ஆகிய நான்குபேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்குக்கொண்டுசெல்லப்பட்டனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு கொண்டு செல்லப்படும்போது தணிகாசலம் வழியிலேயே பரிதாபமாகஉயிரிழந்தார். மற்ற மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இச்சம்பவத்தில் தணிகாசலத்தின் வீட்டுக் கூரை அப்படியே இடிந்து விழுந்தது. பெரும் இடிவிழுந்தது போல சத்தம் கேட்டதாக பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் கூறினர். நிலநடுக்கம்தான் வந்து விட்டதோஎன்று மேலும் பலர் அலறி அடித்தபடி தங்கள் வீடுகளை விட்டு ஓடி வந்ததாகக் கூறினர்.
உரிமம் இன்றி தணிகாசலம் பட்டாசுகளைத் தயாரித்து வந்தது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications