""பா.ஜ.க. பொய் சொல்கிறது"": கருணாநிதி பாய்ச்சல்
சென்னை:
பா.ஜ.கவுடனான உறவை முழுக்க முழுக்க துண்டித்துக் கொள்ளப் போவதாக திமுக பொதுக் குழுக் கூட்டத்தில்எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுகவைத்தான் ஆதரிக்கப் போகிறோம் என்று பா.ஜ.க. தைரியமாக முன் வந்து கூறலாமே?
அதை விட்டுவிட்டு பா.ஜ.கவுடனான உறவை முறித்துக் கொள்ளப் போவதாக நாங்கள்தான் கடந்த பிப்ரவரியில்நடந்த திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் முடிவெடுத்ததாக அக்கட்சி கூறி வருகிறது. இது முழுப் பொய்.
கடந்த பிப்ரவரி மாதம் திமுகவின் பொதுக் குழு கூடவே இல்லை. இது முதல் பொய். மேலும் மார்ச்சில் நடந்த திமுகபொதுக் குழுக் கூட்டத்தில் பா.ஜ.க. உறவை முறித்துக் கொள்ளப் போகிறோம் என்று நாங்கள் எந்தவிதமானமுடிவும் எடுக்கவில்லை.
திமுகவுடன் உறவு இல்லை, ஆனால் நட்பு மட்டுமே இனி இருக்கும் என்று பா.ஜ.கவின் தேசியப் பொதுச்செயலாளரான இல. கணேசன்தான் தொடர்ந்து கூறி வந்தார். இப்போது நாங்கள்தான் அவ்வாறு கூறியதாகக்குற்றம் சாட்டுவது சரியல்ல.
மேலும் இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை திமுக தொடர்ந்து பேசி வருவதாக பொய்யான தகவல்களையும்பா.ஜ.க. பரப்பி வருகிறது.
அனைத்து மதத்தினரையும் சமமாகப் பாவித்து வரும் நாங்கள் எப்படி இந்துக்களை மட்டும் எதிரிகளாகக்கருதுவோம்? இந்துக்கள் மனம் புண்படும்படியாக எப்படிப் பேசுவோம்?
கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரான திருநாவுக்கரசர் இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.ஏனென்றால் அவரும் இவ்வளவு காலமும் திராவிடப் பரம்பரையிலிருந்து விட்டுதான் சமீபத்தில் பா.ஜ.கவில்சேர்ந்துள்ளார்.
பா.ஜ.கவினர் தொடர்ந்து இவ்வாறு பேசி வருவதால் திமுகவுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. மத்தியில்உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் திமுக தொடர்ந்து இடம்பெறும். இதில் எந்தவிதமான மாற்றமும்இல்லை. ஆனால் தமிழக பா.ஜ.கவுடன் எந்தவிதமான உறவும் கிடையாது என்று அவ்வறிக்கையில் கருணாநிதிகூறியுள்ளார்.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிராக தமிழக அரசுகுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகியும் கூட, இது குறித்து மத்திய அரசுகவலைப்பட்டதாகவே தெரியவில்லை.
இதனால் மதிமுகவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே விரிசல் அதிகரித்துக் கொண்டே வரும் சூழ்நிலையில், அதேஅளவிலான விரிசல் திமுகவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையிலும் கூட ஏற்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து கொண்டே எதிர் எதிராகச் செயல்பட்டு வந்த திமுகவும் மதிமுகவும்தற்போது நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications