நாகப்பா குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் கடிதம்
பெங்களூர்:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு வற்புறுத்தக் கூடாதுஎன்று அவருடைய குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட நாகப்பா கடந்த 8ம் தேதி காட்டுக்குள் மர்மமான முறையில் பிணமாகக்கிடந்தார்.
நாகப்பாவின் மரணத்திற்குப் பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணா பதவி விலக வேண்டும் என்று கோரிபா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடந்த வாரம் அம்மாநில சட்டசபையில் பெரும் அமளியை ஏற்படுத்தின.
அவருடைய மரணம் குறித்து நீதி விசாரணைக்கு கர்நாடக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே நாகப்பாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவருடையகுடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அது தேவையில்லை என்று கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
இந்நிலையில் நாகப்பாவின் குடும்பத்தினருக்கு ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில்,
நாகப்பா கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு வற்புறுத்த வேண்டாம். இப்பிரச்சனையில் நீங்கள் யாரும்பேசக் கூடாது.
சி.பி.ஐ. விசாரணைக்குத் தொடர்ந்து வற்புறுத்தினால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அந்தக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
இந்தத் தகவலை நிருபர்களிடம் தெரிவித்த நாகப்பாவின் மனைவி பரிமளா, தன்னுடைய மருமகன் கிரண்பட்டேலுக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.
என் கணவர் கொலைக்கான உண்மையான காரணத்தை அறிந்து கொள்ளும் வரையில் தொடர்ந்து போராடுவேன்.ஆனால் நான் நிச்சயம் அரசியலுக்கு வர மாட்டேன் என்றும் பரிமளா கூறினார்.
-->
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications