பாட்னாவில் பந்த்: பயங்கர வன்முறை வெடித்தது
பாட்னா (பீகார்):
3 மாணவர்களை போலீசார் சுட்டுக் கொன்றதைக் கண்டித்து பாட்னாவில் இன்று முழு அடைப்புக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. இந்த பந்த்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது.
கடந்த சனிக்கிழமை மாலை மூன்று மாணவர்கள் தன்னுடைய டெலிபோன் பூத்தில் திருட முயற்சித்ததாக அதன்உரிமையாளர் போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் அந்த மூன்று பேரையும்கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொன்று விட்டனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பீகார் எதிர்க் கட்சிகளான பா.ஜ.க., சமதா கட்சி, மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட், லோக்ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகளும் சில மாணவ அமைப்புகளும் இன்று பாட்னாவில் பந்த் நடத்த அழைப்புவிடுத்திருந்தன.
அதன்படி இன்று காலை 6 மணிக்கு பந்த் தொடங்கியது. இந்த முழு அடைப்பு தொடங்கிய சிறிது நேரத்திலேயேபாட்னாவின் பல பகுதிகளிலும் வன்முறைகள் வெடித்தன.
சாலையில் சென்று கொண்டிருந்த போலீஸ் ரோந்து ஜீப்புகள் உள்ளிட்ட பல வாகனங்களையும் தடுத்து நிறுத்தி,அவற்றில் இருந்தவர்களை அடித்து விரட்டி விட்டு பந்த் நடத்தியவர்கள் அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தினர்.
தடுக்க வந்த போலீசார் மீது பந்த்துக்கு அழைப்பு விடுத்தவர்கள் கண்மூடித்தனமாகக் கற்களை வீசித் தாக்கினர்.இதில் பல போலீசாரின் மண்டை உடைந்தது.
இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டினர்.
ஆனாலும் வன்முறையாளர்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன."ஹிந்துஸ்தான் டைம்ஸ்" அலுவலக வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களையும் வன்முறையாளர்கள்அடித்து நொறுக்கினர்.
பாட்னா நகர் முழுவதும் போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. இதுவரை 120 வன்முறையாளர்களைப் போலீசார்கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் மூன்று மாணவர்களைச் சுட்டுக் கொன்ற போலீசார் மீது கொலை வழக்கு தொடர வேண்டும் என்றும்,அம்மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் எதிர்க் கட்சிகள்வற்புறுத்தின.
மேலும் பீகாரில் காட்டாட்சி நடக்கிறது என்றும் விமர்சித்த பா.ஜ.க., மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைக்கண்டிக்கும் வகையில் ராப்ரி தேவி தலைமையிலான மாநில அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்என்றும் வலியுறுத்தியது.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications