திமுக தலைவரை ஆதரித்து அதிமுக வெளிநடப்பு: ஆவடியில் அதிசயம்!!
சென்னை:
சென்னை ஆவடி நகராட்சிக் கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த நகராட்சித் தலைவருக்கு ஆதரவாக அதிமுககவுன்சிலர்கள் வெளிநடப்புச் செய்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினர்.
ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் ரயில் நிலையத்தில் சமீபத்தில் புதிய பிளாட்பாரம் கட்டுமானப் பணி தொடக்கவிழா நடந்தது. மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி இதில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில், ஆவடி நகராட்சித் தலைவர் நாசர் (திமுகவைச் சேர்ந்தவர்) பெயர் இடம்பெறவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் நகராட்சிக் கூட்டம் கூடியது. அப்போது, நாசருக்கு பட்டாபிராம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பப்படாதது குறித்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அப்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, அதிமுகவைச் சேர்ந்த அத்தனை கவுன்சிலர்களும்எழுந்து வெளிநடப்புச் செய்வதாக அறிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,
ஆவடி நகராட்சி எல்லைக்குள் நடைபெறும் நிகழ்ச்சியில், எங்களது நகராட்சித் தலைவருக்கு அழைப்புஅனுப்பாமல், புறக்கணித்து அவமானப்படுத்தியுள்ளனர்.
இதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே இதைக் கண்டித்து வெளிநடப்புச் செய்கிறோம் என்றுஅதிமுக கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
திமுக தலைவருக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்புச் செய்தது ஆவடி பகுதியில் பெரியஆச்சரியமாக பேசப்பட்டது.
-->


