கோவையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி?- உஷார் நிலையில் போலீசார்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

ஏராளமான வெடிபொருட்களை ஏற்றிக் கொண்டு கேரளாவின் பாலக்காட்டிலிருந்து ஒரு ஜீப் கோயம்புத்தூரைநோக்கி வந்து கொண்டிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூரில் ஒரு சில நாட்களுக்கு முன் அரசு பஸ் டிப்போ மீது சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள்.அதே நாளில் கோயம்புத்தூர் பிரஸ் கிளப்பில் டைம் பாம் மற்றும் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த ஒருபையும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் சில பத்திரிக்கை அலுவலகங்களுக்கும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள்வந்தன. ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவங்களால் கோயம்புத்தூர் மக்கள் கடும் பீதியில்ஆழ்ந்தனர்.

இந்நிலையில் பாலக்காட்டிலிருந்து கோயம்புத்தூர் நோக்கி ஏராளமான வெடிபொருட்களை நிரப்பிக் கொண்டு ஒருஜீப் வந்து கொண்டிருப்பதாக கோயம்புத்தூர் போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து கேரள எல்லையில் உள்ள வாளையார், ஆனைகட்டி, பொள்ளாச்சி-மீனாட்சிபுரம் ஆகிய இடங்களில்உள்ள சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று இரவு முழுவதும் போலீசார் ஒரு வாகனத்தைக் கூட விடாமல் கடுமையாகச் சோதனை செய்தனர்.

இதற்கிடையே கோயம்புத்தூர் முழுவதும் போலீசார் தீவிரப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.போலீசார் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி வருகின்றனர்.

கடந்த 1998ல் கோயம்புத்தூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு காரணமாகக் கைது செய்யப்பட்டுள்ள கேரளமக்கள் குடியரசுக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி அடைக்கப்பட்டுள்ள சிறை அறையில் திடீர் சோதனைநடத்தப்பட்டபோது, அங்கு பணம், பிளேடுகள் போன்றவை கைப்பற்றப்பட்டன.

இக்கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் கோயம்புத்தூரில் பெரும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

2 கேரள இளைஞர்கள் கைது:

இதற்கிடையே பஸ் டிப்போவில் பெட்ரோல் குண்டு வீசியது, பிரஸ் கிளப்பில் டைம் பாம் வைத்தது ஆகியவைதொடர்பாக 2 கேரள இளைஞர்களை கோயம்புத்தூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இரண்டு இளைஞர்களும் கோயம்புத்தூரின் பலஇடங்களிலும் வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்த சதித்திட்டம் தீட்டியதாகப் போலீஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் மதானியின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. கேரளாவில் கைது செய்யப்பட்ட அவர்கள்இருவரும் கோயம்புத்தூர் கொண்டு வரப்பட்டனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+