மதானி சிறை அறையில் திடீர் சோதனை: பணம், பிளேடுகள் பறிமுதல்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ள கேரளமக்கள் குடியரசு கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி அடைக்கப்பட்டுள்ள சிறை அறையில் திடீர் சோதனைநடத்தப்பட்டது. அப்போது ரூ.2,500 பணமும், 3 பிளேடுகளும் இருந்ததைக் கண்டு சிறை அதிகாரிகள்அதிர்ச்சியடைந்தனர்.
கடந்த 1998ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 50க்கும் மேற்பட்ட மக்கள்கொல்லப்பட்டனர்.
இந்தக் குண்டு வெடிப்பு தொடர்பாக மதானி உள்பட 168 பேர் கைது செய்யப்பட்டு கோயம்புத்தூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். அந்நகரில் உள்ள ஒரு தனி நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு வழக்கின் விசாரணை நடந்துவருகிறது.
மதானியைக் காண வரும் உறவினர்களும், நண்பர்களும் அவரிடம் சட்டவிரோதமாகச் சில பொருட்களைக்கொடுப்பதாக எழுந்த சந்தேகத்தைத் தொடர்ந்து அவரை சிறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்கஆரம்பித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் மதானியைப் பார்க்க வந்திருந்த அவருடைய மனைவி சுபையாவிடமிருந்து சிலசெல்போன்களை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆனால் சிறைப் போலீசார் தன்னைத் தாக்கியதாகவும்தன் மகனைப் பிடித்துக் கீழே தள்ளியதாகவும் சுபையா புகார் தெரிவித்தார்.
இச்சம்பவம் கோயம்புத்தூர் சிறையில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. சிறைக் காவலர்களை எதிர்த்து கைதிகள்போர்க்கொடி எழுப்பினர். தன்னைப் பார்க்க வரும் தன் மனைவிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றுதனி நீதிமன்ற நீதிபதியிடம் மதானி கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் மதானி அடைக்கப்பட்டிருந்த அறையில் சிறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போதுஅங்கு ரூ.2,500 பணமும், மூன்று பிளேடுகளும் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அவர்கள் பெரும்அதிர்ச்சி அடைந்தனர்.
அவற்றைக் கைப்பற்றிய சிறை அதிகாரிகள், இது தொடர்பாக மதானியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் மற்ற கைதிகளின் அறைகளிலும் திடீர் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
-->












Click it and Unblock the Notifications