மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 227 கிலோ பிரமாண்ட குத்துவிளக்கு நன்கொடை
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 227 கிலோ எடை கொண்ட பிரமாண்டமான குத்துவிளக்குநன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
சீதாராமன் என்ற பக்தர் இந்தக் குத்துவிளக்கை நன்கொடையாக வழங்கியுள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்தராஜன் என்ற சிற்பி இந்த குத்துவிளக்கை வடிவமைத்தார். இதற்கு ரூ.80,000 செலவாகியுள்ளது.
சுமார் 227 கிலோ எடையும், 6 அடி உயரம், ஒரே நேரத்தில் 6 கிலோ நெய் ஊற்றும் வகையில் அகலமானவாய்களும் கொண்டதாக குத்துவிளக்கு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குத்துவிளக்கை புத்தாண்டு தினமான நேற்று மாநகரப் போலீஸ் கமிஷனர் சூரிய பிரசாத் தீபமேற்றி துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக ஆணையர் பாஸ்கரன் பேசுகையில்,
சுத்தமான நெய் மட்டுமே குத்துவிளக்கை எரிய வைக்க பயன்படுத்தப்படும். ஆண்டு முழுவதும் அணையாமல்எரிந்து கொண்டே இருக்கும்.
எனவே பக்தர்கள் வேறு எண்ணையை குத்துவிளக்கில் ஊற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்என்றார்.
-->












Click it and Unblock the Notifications