தூத்துக்குடி: மயிலைக் கடத்த முயன்ற மாலத்தீவு மாலுமி கைது
தூத்துக்குடி:
இந்திய தேசியப் பறவையான மயிலை மாலத்தீவுக்குக் கடத்த முயன்ற அந்நாட்டு கப்பல் மாலுமி ஒருவரைப்போலீசார் கைது செய்தனர்.
மாலத்தீவைச் சேர்ந்தவர் அகமது ரியாஸ் முகம்மது. இவர் ஒரு கப்பல் மாலுமி.
மாலத்தீவிலிருந்து ஒரு சரக்குக் கப்பல் தூத்துக்குடிக்கு வந்திருந்தது. அங்கு சரக்குகளை ஏற்றிக் கொண்டு மறுபடியும்மாலத்தீவு செல்லவிருந்தது.
இந்நிலையில் கப்பலை பரிசோதித்த போலீசார் முகம்மதுவின் அறையிலும் சோதனை நடத்தினர்.
அங்கு ஒரு மயில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் விசாரித்தபோதுதூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு நபர்தான் தன்னிடம் மயிலை விற்றதாக அந்த மாலுமி கூறினார்.
இதையடுத்து தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவுக்கு மயிலைக் கடத்த முயன்றதாக முகம்மதுவைப் போலீசார் கைதுசெய்தனர். மேலும் அவருக்கு மயிலை விற்ற தூத்துக்குடி நபரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட முகம்மது தூத்துக்குடி விரைவு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு 15 நாள் காவலில்வைக்கப்பட்டார்.
-->












Click it and Unblock the Notifications