பொங்கல் முதல் தூத்துக்குடி to

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:

கொழும்புக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை நடத்த தூத்துக்குடி துறைமுகம் தயாராக உள்ளது. ஆனால் வரும்பொங்கல் அன்றுதான் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை இனப் பிரச்சினை கடந்த 1980ம் ஆண்டுகளில் உச்சகட்டத்தை அடைந்தது. இதையடுத்துராமேஸ்வரத்திற்கும், தலைமன்னாருக்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நார்வேயின் உதவியுடன் நடைபெற்று வரும் சமரச பேச்சுவார்த்தைகளின் விளைவாகவிடுதலைப்புலிகளும், இலங்கை ராணுவத்தினரும் சண்டையைக் கைவிட்டுள்ளனர். கடந்த 10 மாதங்களுக்கும்மேலாக இலங்கையில் நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது.

இதையடுத்து தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க இலங்கைஅரசு ஆர்வம் காட்டியது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடிக்கும், கொழும்புக்கும் இடையே கப்பல் போக்குவரத்தை நடத்த முயற்சிகள்எடுக்கப்பட்டு தற்போது அனைத்துப் பணிகளும் முடிந்துள்ளன.

அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த நலையில், பயணிகள் போக்குவரத்தைத் தொடங்குவதில் மட்டும் தாமதம்ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவர் ரகுபதி கூறுகையில்,

அமைச்சகம் தொடர்பான பணிகள் முடிந்து விட்டன. கப்பல் போக்குவரத்திற்கான அனுமதியும் வழங்கப்பட்டுவிட்டது.

கப்பலை இயக்குவதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். கப்பலும் ரெடியாகவே உள்ளது என்றார்.

தற்போது மார்கழி மாதம் என்பதால் கப்பல் போக்குவரத்தை இப்போது தொடங்குவதில் தாமதம் காட்டப்படுவதாககூறப்படுகிறது. தை மாதம்தான் நல்ல மாதம். அந்த மாதத்தில் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினால்அமோகமாக இருக்கும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வரும் தை மாதம் பிறக்கும் பொங்கலன்று கொழும்புவுக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்றுதெரிகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+