வினாடி- வினாவில் "லிம்கா" சாதனை
சென்னை:
பிரபல வினாடி-வினா (குயிஸ்) தொகுப்பாளரான கிரி பாலசுப்பிரமணியம், சென்னையில் நடந்த ஒருவினாடி-வினா போட்டியில் ஒரே நாளில் 522 கேள்விகள் கேட்டு "லிம்கா" சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
இன்டியாஇன்போவின் குயிஸ்பிரெய்ன் டாட் காம் (www.quizbrain.com) பொதுஅறிவு இணையத் தளத்தின்ஆசிரியராக உள்ளார் கிரி.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த இணையத் தளத்தை நடத்தி வரும் கிரி நாடு முழுவதும் ஏராளமானவினாடி-வினா போட்டிகளையும் நடத்தியவர். டாடா கன்சல்டன்ஸி சாப்ட்வேர் நிறுவனத்தின் சார்பில் நாடுமுழுவதும் பல வினாடி-வினா போட்டிகளை கிராமப் பகுதிகளில் நடத்தி வருகிறார்.
இந்தியாவின் முதல் சாப்ட்வேர் வினாடி-வினா புத்தகமான Know IT Better என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
சென்னையில் சமீபத்தில் நடந்த ஒரு மெகா வினாடி-வினா போட்டியில்தான் கிரியின் "லிம்கா" சாதனைநிகழ்த்தப்பட்டது. அந்தப் போட்டியில் 522 கேள்விகளைக் கேட்டு இந்தச் சாதனையைப் படைத்தார் கிரி.
வினாடி-வினா போட்டிகளில் ஒரே நாளில் இத்தனை கேள்விகள் கேட்கப்பட்டது இதுதான் முதல் முறை என்கிறது"லிம்கா".
இதன்மூலம் பி.பி.சியில் வினாடி-வினாப் போட்டிகளை நடத்தி வரும் சித்தார்த்த பாசு மற்றும் புகழ்பெற்றவினாடி-வினா தொகுப்பாளரான டெரக் ஓ பிரையன் ஆகியோரின் வரிசையில் கிரியும் இடம் பெற்றுவிட்டார்."வால்ட் டிஸ்னி", "டைம்ஸ் ஆப் இந்தியா" ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர் இவர்.
"லிம்கா" சாதனை செஞ்சாச்சு... அடுத்து என்ன என்று கிரி பாலசுப்பிரமணியத்திடம் கேட்டால், "வேறு என்ன?"கின்னஸ்" சாதனைக்கான முயற்சிதான்" என்கிறார். ஆல் த பெஸ்ட்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications