காவிரி விவகாரம்: 9ம் தேதி பந்த் உறுதி- திமுக அறிவிப்பு
சென்னை:
மேட்டூர் அணையில் தற்போது திறந்து விடப்படும் 15,000 கன அடி நீர் சம்பா பயிரைக் காப்பாற்றுவதற்குப்போதுமானதாக இருக்காது என்று திமுக விவசாயப் பிரிவு செயலாளர் கே.பி. ராமலிங்கம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரியில் கர்நாடக அரசு உடனடியாக நீரைத் திறந்துவிட தமிழக அரசு வற்புறுத்த வேண்டும் என்பதற்காக வரும்9ம் தேதி காவிரி டெல்டா பகுதிகளில் பந்த் நடத்த திமுக விவசாயப் பிரிவு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த பந்த்தைத் தடுத்து நிறுத்துவதற்காக, 9ம் தேதி வரை மட்டுமே வினாடிக்கு 15,000 கன அடி நீரைத் திறந்துவிடவேண்டும் என்று தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
சம்பா பயிரைக் காப்பாற்றுவதற்கு இந்த 15,000 கன அடி நீரெல்லாம் போதாது. இந்த நீரால் இரண்டு லட்சம் ஏக்கர்நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் தற்போதைக்கு மட்டுமே பிழைக்கும்.
ஆனால் 9ம் தேதிக்குப் பின்னர் சம்பா பயிர்களின் கதி என்ன? நீர் இல்லாவிட்டால் மீண்டும் அவை கருகி விடும்வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.
எனவே காவிரியில் கர்நாடக அரசு உடனடியாக நீரைத் திறந்துவிட தமிழக அரசு வற்புறுத்த வேண்டும் என்றுகோரி நாங்கள் அழைப்பு விடுத்துள்ள பந்த் திட்டமிட்டபடி 9ம் தேதி நடக்கும்.
காவிரியில் கர்நாடக அரசு நீர் திறந்துவிட்டால் மட்டுமே சம்பா பயிர்கள் முழுமையாகப் பிழைக்கும் என்றார்ராமலிங்கம்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications