ஜெயலலிதாவுக்கு பெண் கமாண்டோ படை
சென்னை:
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெண் கமாண்டோ படையின் பாதுகாப்புஅளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில்தான் தற்போது முதல் முறையாக பெண் போலீசார் அடங்கிய கமாண்டோ படைஉருவாக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழக சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த 21 பெண்கள் கமாண்டோ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள்அனைவருமே திருமணம் ஆகாதவர்கள்.
கடந்த 12 வாரங்களாக இவர்கள் சென்னை மருதம் வளாகத்தில் தீவிரப் பயிற்சி பெற்று வந்தனர். தற்போதுகமாண்டோ படையில் இந்தப் பெண் போலீசார் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆண் கமாண்டோக்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளே இவர்களுக்கும் அளிக்கப்பட்டது. உயரமானகட்டடங்களில் இருந்து பாராசூட்டில் குதிப்பது, மோட்டார் சைக்கிளிலும் காரிலும் சென்று கொண்டே குறிதவறாமல் துப்பாக்கியால் சுடுவது ஆகிய பயிற்சிகளை இந்தப் பெண் போலீசார் அநாயாசமாகச் செய்து முடித்தனர்.
அதேபோல், வெடிகுண்டுகளைப் பத்திரமான இடத்துக்கு அப்புறப்படுத்துவது, மறைந்துள்ள தீவிரவாதிகளைஅதிரடியாகச் சென்று தாக்குவது, நீச்சல், குதிரையேற்றம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் கூட பெண்கமாண்டோக்கள் மேற்கொண்டனர்.
நேற்றுடன் இந்தப் பயிற்சிகள் முடிவடைந்த நிலையில், உடனடியாக அவர்கள் கமாண்டோ பிரிவில்சேர்க்கப்பட்டனர்.
முன்னதாக, டி.ஜி.பி. நெய்ல்வால், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார் உள்ளிட்ட உயர்அதிகாரிகளின் முன்னிலையில் தங்களுடைய சாகச நிகழ்ச்சிகளையும் செய்து காட்டினர் அந்தப் பெண்கமாண்டோக்கள்.
இந்தப் பெண் கமாண்டோக்களில் சிலர்தான் ஜெயலலிதாவின் பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications