வீரப்பன் ஆட்கள்: கர்நாடகத்தில் 3 பேர், தமிழகத்தில் மேலும் ஒருவர் கைது
பெங்களூர்:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தலில் வீரப்பனுக்கு உதவிய மேலும் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்டு 25ம் தேதி வீரப்பனால் கடத்தப்பட்ட நாகப்பா, சென்ற மாதம் 8ம் தேதி கர்நாடகாவின் செங்கடிகாட்டுப் பகுதியில் மர்மமான முறையில் பிணமாகத்தான் மீட்கப்பட்டார்.
இதையடுத்து வீரப்பனைத் தேடும் வேட்டையை தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர் தீவிரமாகமேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே நாகப்பா கடத்தல் தொடர்பாக தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழர் விடுதலைஇயக்கத்தைச் சேர்ந்த பாலமுருகன், பாக்யராஜ் மற்றும் ராஜா என்ற அலெக்சாண்டர் ஆகியோரை தமிழகஅதிரடிப்படையினர் கைது செய்தனர்.
வீரப்பன் தலைமையில் மொத்தம் 25 பேர் கொண்ட கும்பல்தான் நாகப்பாவைக் கடத்திச் சென்றோம் அவர்கள்தங்கள் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தனர்.
அவர்கள் அளித்த தகவலின்படி, கர்நாடக மாநிலம் கொள்ளேகால் தாலுகாவைச் சேர்ந்த அமுல்ராஜ், சகாய ராஜ்மற்றும் முதலிமுத்து ஆகிய மூன்று பேரை கர்நாடக அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பாவைக் கடத்திய கும்பலில் அவர்களும் இருந்தனர் என்று தெரிய வந்துள்ளது. மேலும், கடத்தலில்தொடர்புடைய மேலும் சிலரைப் பற்றிய தகவல்களையும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
வீரப்பனின் தம்பி அர்ஜுனனின் சாவுக்குப் பழிவாங்கும் விதமாகவே அவன் நாகப்பாவைக் கடத்தி, கொலைசெய்ய தீட்டம் தீட்டியதாக தற்போது கைது செய்யப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் கர்நாடக அமைச்சர் ராஜு கெளடாவையும் கடத்தி ஏராளமான பணம் பறிக்க வீரப்பன் சதித் திட்டம்தீட்டியிருந்தான் என்பதும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்தது.
நாகப்பா கடத்தலில் தொடர்புடைய மற்றவர்களைத் தேடும் பணியில் அதிரடிப்படையினர் தொடர்ந்துஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஒரு தமிழ் தீவிரவாதி கைது:
இந்நிலையில் கைது செய்யப்பட்ட பாக்யராஜ் என்பவன் அளித்த தகவலின் அடிப்படையில் ஆண்டிமடத்தைச்சேர்ந்த குமரேசன் என்ற மற்றொரு தீவிரவாதியையும் தமிழக அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.
குமரேசனும் சுப. இளவரசன் தலைமையிலான தமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவன்தான் என்று தெரியவந்துள்ளது.
நெய்வேலி மின் கோபுரம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட சம்பவத்தில் குமரேசனுக்கும் தொடர்பு உள்ளதாகப்போலீசார் தெரிவித்தனர். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications