போலீசாரிடம் இருந்து பாதுகாப்பு கேட்கிறார் நக்கீரன் கோபால்
டெல்லி:
தமிழக போலீசாரிடம் இருந்து தன்னைப் பாதுகாக்கக் கோரி நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.
வீரப்பனை பலமுறை காட்டுக்குள் போய் சந்தித்துவிட்டு வந்தவர் கோபால். ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இவரையும்இவரது பத்திரிக்கையின் நிருபர் சிவசுப்பிரமணியத்தையும் தமிழக போலீசார் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர்.
சிவசுப்பிரமணியம் சிறையில் அடைக்கப்பட்டு, அலைகழிக்கப்பட்டு சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்தார். இப்போது அவர் மீதுவேறு வழக்குகள் போடும் வேலைகள் நடந்து வருகின்றன.
கோபாலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பலமுறை விசாரித்துவிட்டனர். இருப்பினும் நக்கீரன் நிருபர்கள் தவிர, நக்கீரன் அலுவலகம், கோபாலின்வீடும் தீவிர ரகசிய போலீஸ் கண்காணிப்பில் உள்ளன. தன்னைக் கைது செய்ய போலீசார் முயல்வதாக கோபால் கூறி வருகிறார்.
இந் நிலையில் தனக்கு போலீசாரின் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்புக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார் கோபால்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், என்னை ஏதாவது ஒரு பொய் கேசில் சிக்க வைத்து கைது செய்ய போலீசார் முயல்கின்றனர். 1996ம்ஆண்டு எனக்கு வீரப்பன் கொடுத்த பேட்டியில் அப்போதைய ஜெயலலிதா ஆட்சியை மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தான்.
ஜெயலலிதாவின் திடீர் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்துக்கு கோடிக்கணக்கான மக்கள் பணம் செலவிடப்பட்டதை வீரப்பன்குறிப்பிட்டுப் பேசியிருந்தான். இந்தப் பேட்டி பல டிவி சேனல்களில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பானது.
இதனால் ஆட்சியையே இழந்தார் ஜெயலலிதா. தனது பதவி காலியாக வீரப்பனின் பேட்டியும் முக்கியப் பங்கு வகித்ததாக ஜெயலலிதாநினைக்கிறார்.
இதனால் என்னைப் பழி வாங்க முயற்சி நடக்கிறது. 1998ம் ஆண்டிலேயே என் மீது வீரப்பன் விவகாரத்தில் போலி வழக்குகள் போடமுயற்சி நடந்தது.
தொடர்ந்து போலீசாரின் கண்காணிப்புக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாகி வருகிறேன். என்வே, எனக்கு நீதிமன்றம் தான் பாதுகாப்புத் தரவேண்டும். போலீசார் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை நீதிமன்றம் தடுக்க வேண்டும்.
இவ்வாறு கோபால் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ராஜேந்திர பாபு, பிரிஜேஷ் குமார், மாத்தூர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் மனு மீதானவிசாரணையை 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
-->












Click it and Unblock the Notifications