நாளை போகி பண்டிகை: டயர், பிளாஸ்டிக் எரித்தால் கடும் நடவடிக்கை
சென்னை:
நாளை கொண்டாடப்படவுள்ள போகிப் பண்டிகையையொட்டி டயர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களைஎரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் துணை கமிஷனர்சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொங்கல் தினத்திற்கு முன்தினம் போகிப் பண்டிகை கொண்டாடப்படுவது தமிழர்களின் மரபு.
"பழையன கழிதலும், புதியன புகுதலும்..." என்பதற்கேற்ப பழைய பொருட்களை எல்லாம் மக்கள் தீயிட்டுக்கொளுத்துவது வழக்கம்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக "போகித் தீ" கொளுத்துகிறோம் என்று கூறி டயர்களையும், பிளாஸ்டிக்பொருட்களையும் பொதுமக்கள் கொளுத்தி வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் படுமோசமாகப்பாதிக்கப்படுகிறது.
ஏற்கனவே பனிக்காலமாகிய தற்போது காலையில் விடிந்து வெகு நேரமாகியும் கூட பனி விலகாமல் மக்களைவதைத்து எடுத்து வருகிறது. அந்த அளவுக்கு மூடுபனி ஏற்பட்டு, எதிரே யார் வருகிறார்கள் என்பது கூடத்தெரியாமல் போகும் நிலை ஏற்படுகிறது.
இதனால் காலை நேரங்களில் சாலைப் போக்குவரத்தும், ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துக்களும் அடிக்கடிபாதிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் போகித் தீயும் கொளுத்தப்பட்டால், அதன் மூலம் கிளம்பும் புகையும் மூடுபனியுடன் சேர்ந்துகொண்டு மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாவார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் போகிப் பண்டிகை தினத்தன்று காலை 9 மணி ஆகியும் கூட கடுமையானபுகை மூட்டம் விலகாத நிலைதான் இருந்து வந்தது.
எனவே பொதுமக்கள் போகிப் பண்டிகையை அளவோடு கொண்டாட வேண்டுமென்று சென்னை மாநகரப்போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
டயர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதுணைக் கமிஷனரான சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications