வைகோவுக்கு ஆதரவாக கையெழுத்து: காங். கூட்டத்தில் கூச்சல், குழப்பம்
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கையெழுத்து போட்டதற்காக காங்கிரஸ்தலைவர் சோ. பாலகிருஷ்ணன் மற்றும் செயல் தலைவர் இளங்கோவன் ஆகியோரை காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர்கண்டித்தனர்.
இதனால் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
வைகோ கைதைக் கண்டித்து ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை மதிமுக நடத்தி வருகிறது.திமுக தலைவர் கருணாநிதிதான் இதற்கான படிவத்தில் முதல் கையெழுத்தைப் போட்டார்.
இந்தப் படிவத்தில் இளங்கோவன், சோ.பா. உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் கூட கையெழுத்துப் போட்டனர்.
நேற்ற நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
கூட்டத்தின்போது இளங்கோவன் பேசுவதற்கு எழுந்தபோது, முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மற்றும் முன்னாள்எம்.எல்.ஏ. முருகானந்தம் ஆகியோர் கூச்சலிட ஆரம்பித்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை விவகாரத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக மத்தியில் உள்ள பா.ஜ.க.அரசே மிகவும் ஜாக்கிரதையாக முடிவுகளை எடுத்து வரும்போது, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தன்னிச்சையாகச்செயல்பட்டு வைகோவுக்கு ஆதரவாகக் கையெழுத்துப் போட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர்கள்கோஷம் போட்டனர்.
"வைகோ கைது செய்யப்பட்டதற்கு எதிரான இயக்கத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கையெழுத்து போட்டது எப்படிநியாயமாகும் என்று சாத்தான்குளம் இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நிச்சயம் கேள்விஎழுப்புவார். என்ன சொல்லப் போகிறோம்?" என்று முருகானந்தம் கேள்வி எழுப்பினார்.
அப்போது அவர்களுக்கு எதிராக வேறு சிலரும் எழுந்து பதிலுக்குக் கோஷம் போட்டனர். இதனால் கூட்டத்தில்பெரும் அமளி ஏற்பட்டது.
"பொடா சட்டம் அறிமுகமான போதே அதை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது. இந்தச்சட்டத்தை அதிமுக தவறாகப் பயன்படுத்தும் என்றும் நாம் அப்போதே கூறியிருந்தோம். இதை வலியுறுத்தும்நோக்கிலும், பொடா சட்டத்தின் கீழ் வைகோவைக் கைது செய்தது தவறு என்பதை வலியுறுத்தவும், மனிதாபிமானஅடிப்படையிலும்தான் நாங்கள் கையெழுத்துப் போட்டோம்" என்று சோ.பா., இளங்கோவன் தரப்பில்கூறப்பட்டது.
ஆனாலும் நேற்றைய கூட்டத்தில் தொடர்ந்து அமளி நிலவியது. நீண்ட நேரத்திற்கு இந்தக் கூச்சல், குழப்பம்தொடர்ந்தது.
இடைத் தேர்தல்- திமுகவுக்கு அழைப்பு:
இதற்கிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணியை உதறி விட்டு திமுக வெளியே வந்தால், சாத்தான்குளம் இடைத்தேர்தலில் அக்கட்சியின் ஆதரவைக் கோருவோம் என்று சோ.பா. கூறினார்.
நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பின் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
இந்திய கம்யூனிஸ்ட், இந்திய தேசிய லீக், மக்கள் தமிழ் தேசம், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள்ஏற்கனவே எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆனால் திமுக இன்னும் பா.ஜ.கவுடன்தான் உறவு வைத்துள்ளது. அந்த உறவை முறித்துக் கொண்டு வந்தால்அக்கட்சியின் ஆதரவைக் கோருவது குறித்துப் பரிசீலனை செய்வோம்.
தற்போது எதுவும் சொல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளோம் என்றார் சோ.பா.
-->












Click it and Unblock the Notifications