சட்டசபையில் த.மா.கா.கா. தனித்து செயல்பட காளிமுத்து அனுமதி
சென்னை:
கிள்ளியூர் எம்.எல்.ஏ. டாக்டர் குமாரதாஸ் தலைமைல் அதிமுகவால் உருவாக்கப்பட்ட தமிழ் மாநில காமராஜர்காங்கிரஸ் கட்சி சட்டசபையில் தனித்து செயல்பட சபாநாயகர் காளிமுத்து அனுமதி வழங்கியுள்ளார்.
தமாகாவை மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்க்கக் கூடாது என்று டாக்டர் குமாரதாஸ், ஹக்கீம், மணி நாடார், செ.கு.தமிழரசன் உள்ளிட்ட ஐந்து எம்.எல்.ஏக்களும் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், அவர்களை அதிமுக பின்னணியில் இருந்து ஆட்டுவித்ததாால் அவர்களை ஒதுக்கிவிட்டு தமாகாவைதாய்க் கட்சியாக காங்கிரஸ் கட்சியில் இணைத்தார் அதன் தலைவரான ஜி.கே. வாசன்.
அன்று முதல் ஐந்து அதிருப்தி எம்.எல்.ஏக்களும் தாங்கள் தொடர்ந்து தமாகாவிலேயே இருப்பதாகக் கூறி வந்தனர்.இதில் ஒரு எம்.எல்.ஏ. இறந்தார். மற்ற நால்வரும் தொடர்ந்து தனித்தே இயங்கினர்.
இந்நிலையில் கடந்த 10ம் தேதி தமிழ் மாநில காமராஜர் காங்கிரஸ் என்ற கட்சியை டாக்டர் குமாரதாஸ் உருவாக்கிதேர்தல் கமிஷனிடம் பதிவு செய்தார். இதற்கு அதிமுக முழு அளவில் உதவியது.
தங்களது புதுக் கட்சியை சட்டசபையில் தங்களைத் தனித்தே செயல்பட அனுமதி அளிக்குமாறு காளிமுத்துவிடம்அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று சென்னையில் நிருபர்களிடம் காளிமுத்து பேசுகையில்,
1951 அரசியல் சட்டத்தின் 29-ஏ பிரிவின் படி தமிழ் மாநில காமராஜர் காங்கிரஸ் என்ற இந்தக் கட்சி பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதை உறுதி செய்து தேர்தல் கமிஷனும் எனக்குத் தகவல் அனுப்பியுள்ளது. எனவே தமிழக சட்டசபை இந்தக்கட்சியை அங்கீகரிக்கிறது. தமிழக சட்டசபையில் தமிழ் மாநில காமராஜர் காங்கிரஸ் கட்சி தனித்தே செயல்படஅனுமதி வழங்கப்படுகிறது.
வரும் 23ம் தேதி தமிழக சட்டசபை தொடங்குகிறது. சுமார் ஒரு வார காலத்திற்கு இந்தக் கூட்டத் தொடர்நடைபெறும். பின்னர் மார்ச் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றார் காளிமுத்து.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications