காவிரி நீர்: தமிழகத்தைக் குழப்பும் கர்நாடகம்
பெங்களூர்:
காவிரியில் தமிழகத்திற்கு தினமும் 4,500 கன அடி நீரை ஒரு வாரத்திற்குத் திறந்து விடுவது குறித்து கர்நாடகமுதல்வர் கிருஷ்ணா அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த திங்கள்கிழமை நடக்கவிருந்த காவிரி ஆணையக் கூட்டம் கேரள, பாண்டிச்சேரி முதல்வர்கள் வராததால்கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கிருஷ்ணாவும்பிரதமரைத் தனித் தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அதன் முடிவில் தமிழகத்துக்கு 6 டி.எம்.சி. நீரை விடத் தயாராக இருப்பதாகவும், தினமும் 1,200 கன அடி நீர் வீதம்பிப்ரவரி மாத இறுதி வரை இந்த நீரை கொஞ்சம் கொஞ்சமாகத் திறந்துவிடுவதாகவும் வாஜ்பாயிடம் கிருஷ்ணாஉறுதியளித்தார்.
ஆனால், மிகக் குறைவாக நீர் வந்தால் எந்தப் பலனும் இல்லை என தமிழகம் கூறியது. தினமும் 4,500 கன அடிவீதம் குறைந்தது 2 வாரங்களுக்காவது நீரைத் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமரிடம்ஜெயலலிதா கோரினார்.
இதையடுத்து மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இரு மாநில அணைகளின் நீர்மட்டத்தையும் ஆராய்ந்தது. பின்னர்நேற்று காலை பிரதமர் வாஜ்பாயிடம் ஒரு கடிதத்தை மத்திய நீர் வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சரண் சேத்திகொடுத்தார். அதில், தமிழகத்துக்கு தினமும் 4,500 கன அடி வீதம் ஒரு வாரத்திற்கு காவிரியில் கர்நாடக அரசு நீரைதிறந்து விட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
ஆனால் கெளடா நிருபர்களிடம் பேசிய அடுத்த சில மணி நேரங்களிலேயே கர்நாடக அரசு அதை மறுத்து ஒருஅறிக்கை வெளியிட்டது. ஏற்கனவே கூறியபடி, தினமும் 1,200 கன அடி வீதம் மட்டுமே நீர் திறந்துவிடப்படும்என்று கூறி கர்நாடக அரசு பின் வாங்கியுள்ளது. தற்போது தினமும் 1,200 கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டுவருகிறது.
ஆனால், தமிழகம் கூடுதல் நீர் கேட்டு மீண்டும் பிரதமரின் உதவியை நாடியுள்ளது. இதையடுத்து மத்திய அரசும்கர்நாடகத்திடம் அதிக நீரை விடுமாறு கேட்டுள்ளது.
இதையடுத்து தினமும் 4,500 கன அடி வீதம் நீர் திறந்து விடுவது குறித்து கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல், தலைமைச் செயலாளர் ரவீந்திரா ஆகியோருடன் கிருஷ்ணா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையே சென்னையில் நிருபர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன், கர்நாடகஅரசுடன் தமிழக அரசு விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைப் பெற்றுத் தரவேண்டும் என்று கூறினார்.
-->












Click it and Unblock the Notifications