வயல்களுக்கு நீர் பாய்ச்சும் டேங்கர் லாரிகள்: தஞ்சையில் பரிதாபம்
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் நெற்கதிர்கள் முற்றிய நிலையில் உள்ள வயல்களில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர்பாய்ச்சி பயிர்களைக் காப்பாற்றும் கடைசிக் கட்ட முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக கருதப்படும் தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டனம் மாவட்டங்களில் வறட்சிகோர தாண்டவமாடி வருகிறது. இயற்கையின் புறக்கணிப்பு, கர்நாடகத்தின் வறட்டுப் பிடிவாதம் எனசகலவிதங்களிலும் இப்பகுதி விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயத்திற்குத் தண்ணீர் இல்லாமல் சம்பா பயிர்கள் கருகிக் கொண்டிருப்பதைக் காண சகிக்க முடியாமல் இரண்டுவிவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். மற்றொரு பெண் விவசாயி அதிர்ச்சியில் தன் வயலிலேயே மயங்கிவிழுந்து உயிரிழந்தார்.
இந்நிலையில் நன்கு வளர்ந்த பயிர்கள் ஓரளவு தண்ணீர் கிடைத்தால் அறுவடைக்குத் தயாராகி விடும் நிலைஉள்ளது. இதுபோன்ற பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் கடைசிக் கட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக பணம் கொடுத்து டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து வயல்களில் பாய்ச்சி பயிர்களைக்காப்பாற்ற அவர்கள் முனைந்துள்ளனர்.
தினசரி ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை பணம் கொடுத்து விவசாயிகள் இந்தத் தண்ணீரைக் கொண்டு வந்து தங்கள்நிலங்களில் பாய்ச்சுகின்றனர்.
பொய்கை நல்லூர், வடகூர், பரவை உள்ளிட்ட கிராமங்களில் இந்த பரிதாபக் காட்சிகளைக் காண முடிகிறது.
இதுவரை எவ்வளவோ செலவு செய்தாகி விட்டது. கொஞ்சம் தண்ணீர் கிடைத்தால், இந்தப் பயிர்கள்அறுவடைக்குத் தயாராகி விடும். எனவேதான் மேலும் செலவாவதைக் கணக்குப் பார்க்காமல் லாரிகள் மூலம்தண்ணீர் கொண்டு வந்து நிலங்களில் பாய்ச்சி வருகிறோம் என்று விவசாயிகள் கூறினர்.
-->


