தமிழகத்தில் பாமாயில் ஆலை: பெரம்பலூரில் அமைகிறது

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் தமிழகத்தின் முதல் பாமாயில் ஆலை வரும் ஜூலை மாதம் முதல்செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பாமாயில் எண்ணைய் பிழியும் வசதி கொண்ட ஆலைகள் கிடையாது. எனவே இங்கு விளையும்நுங்குகளை அருகில் உள்ள ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு சென்றுதான் பிழிந்து பாமாயில் தயாரிக்கவேண்டியுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்திலேயே பாமாயில் பிழியும் ஆலையை நிறுவ தமிழக அரசு முடிவு செய்தது.இதைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் பார்ப்பனச்சேரி என்ற இடத்தில் சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில்பாமாயில் பிழியும் ஆலை அமைக்கப்பட்டு வருகிறது.

ஆலையின் தலைமை நிர்வாகியான ஜெயமணி இதுகுறித்துக் கூறுகையில்,

மத்திய அரசின் ரூ.2.40 கோடி நிதியுதவி மற்றும் தனியாரின் ஒத்துழைப்புடன் ரூ.5 கோடி மதிப்பில் இந்த ஆலைஉருவாகி வருகிறது.

ஒரு மணி நேரத்திற்கு சுமார் இரண்டரை டன் பாமாயில் நுங்குகளைப் பிழியும் திறன் கொண்ட வகையில் இந்தஆலை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆலை அமைவதன் மூலம் பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட ஆறு மாவட்ட மக்கள் பயன்அடைவார்கள்.

வரும் ஜூலை மாதம் முதல் இந்த ஆலை செயல்படத் தொடங்கும் என்றார் ஜெயமணி.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+