செங்கல்பட்டு-விழுப்புரம் இடையே விரைவில் மின்சார ரயில்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
செங்கல்பட்டுக்கும் விழுப்புரத்திற்கும் இடையே உள்ள ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள்முடிவடைந்துள்ளதால் விரைவில் இப்பாதையில் மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
செங்கல்பட்டு மற்றும் விழுப்புரத்திற்கும் இடையிலான ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் ரூ.12 கோடிசெலவில் நடந்து வந்தன. மொத்தம் 127 கிலோமீட்டர் தொலைவு கொண்ட ரயில் பாதை மின்மயமாக்கல் பணிகள்தற்போது நிறைவு பெற்றுள்ளன.
இதைத் தொடர்ந்து இந்தப் பாதையில் மின்சார ரயில்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ரயில்வேவாரியத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் மின்சார ரயில்கள் இயக்கப்படும்.
இப்பாதையில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும் என்பதால் ரயில் பயண நேரம் வெகுவாகக்குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications