சேலம் அருகே வங்கி கேஷியர் படுகொலை: கள்ளச்சாராய வியாபாரிகள் வெறிச் செயல்?
சேலம்:
சேலம் அருகே வங்கி கேஷியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.கள்ளச்சாராய வியாபாரிகள்தான் இவரைக் கொன்று வீசியுள்ளனர் என்று தெரிகிறது.
சேலம் அருகே உள்ள அயோத்தியாப்பட்டினத்தைச் சேர்ந்தவர் கோபால். இவர் வங்கி ஒன்றில் கேஷியராகபணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் வங்கிக்குச் சென்ற அவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து போலீஸில் புகார்கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வங்கி அருகே உள்ள ஓடை ஒன்றின் அருகே நேற்று காலை கோபால் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
அவரது தலை, முகம் போன்றவை கல்லால் அடித்துச் சிதைக்கப்பட்ட அடையாளம் தெரிந்தது. அப்பகுதியைச்சேர்ந்த கள்ளச்சாராய வியாபாரிகள்தான் கோபாலிடம் பணம் பறிப்பதற்காக இந்தக் கொலையை செய்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.
கோபாலிடம் இருந்த கைக்கடிகாரம், பையில் இருந்த பர்ஸ் ஆகியவற்றைக் காணவில்லை என்றும் போலீசார்தெரிவித்தனர்.
-->












Click it and Unblock the Notifications