பாதாள அறைக்குள் "சிறைபட்ட" 5,000 பக்தர்கள்: பழனி கோவிலில் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

பழனி:

பழனி முருகன் கோவிலில் முருகனை தரிசிக்க வந்த 5,000 பக்தர்கள், கோவில் துணை ஆணையரின் தவறால்காற்றுக் கூட புக முடியாத பாதாள அறைக்குள் வைத்துப் பூட்டப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் எழுந்தது.

பழனியில் தைப்பூசத் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்முருகனை தரிசிப்பதற்காக பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்குவந்திருந்தனர்.

முருகனை தரிசிப்பதற்காகக் கோவிலில் அவர்கள் வரிசையாகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது 5,000க்கும்மேற்பட்ட பக்தர்கள் ஒரு பெரிய பாதாள அறையில் காத்திருந்தனர்.

அந்த அறை மிகவும் சிறிதாக, காற்றுக் கூட உள்ளே வர முடியாத அளவுக்கு இருந்தது. ஆனால் அங்குதான்காத்திருக்க வேண்டும் என்று கூறி கோவில் அதிகாரிகள் விட்டதால் பக்தர்கள் வேறு வழியின்றி அங்கு இருந்தனர்.

இந்நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு மேல் அறையில் காத்திருந்த சுமார் 5,000 பக்தர்களைக் கவனிக்காத கோவில்துணை ஆணையர் அந்த அறையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்று விட்டார்.

இதனால் பாதாள அறைக்குள் அடைபட்டிருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்கள் மிகவும் பீதியடைந்தனர்.பலருக்கு மயக்கமே வந்து விட்டது.

இதற்கிடையே வெளியே இருந்த பல பக்தர்கள் தங்களுடன் வந்த உறவினர்களைக் காணவில்லை என்று பழனிகாவல்துறை டி.எஸ்.பியை முற்றுகையிட்டு புகார் கூறினார். ஒரே நேரத்தில் இத்தனை பக்தர்கள் எப்படிக் காணாமல்போவார்கள் என்று ஆச்சரியப்பட்ட போலீஸார் அவர்களைத் தீவிரமாக தேடினர்.

அப்போதுதான் பாதாள அறைக்குள் வைத்து அந்த பக்தர்கள் பூட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்துகோவில் துணை ஆணையருக்கு உடனடியாகத் தகவல் தரப்பட்டது. ஆனால் அவர் வந்து சேரவில்லை.

இதையடுத்து அதிகாலை 2 மணியளவில் கோவில் நிர்வாகி விரைந்து வந்து கதவைத் திறந்து பக்தர்களை "ரிலீஸ்"செய்தார். அதன் பிறகே பக்தர்களுக்கு உயிர் வந்தது.

வெளியே வந்த பல பக்தர்கள் மூர்ச்சையான நிலையில் காணப்பட்டனர். இந்தச் சம்பவம் பழனியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் ஒரு இடத்தில் கோவில் அதிகாரிகள் இதுபோல அலட்சியமாக இருந்ததுபக்தர்கள் மனதை வேதனைப்படுத்தியது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+